திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சேரும் சகதியுமாக வந்த அஜித்.. யார், என்னனு தெரியாமல் அவமானப்படுத்தி அடாவடி செய்த ஹோட்டல் நிர்வாகம்

தென்னிந்திய சினிமாவின் மாபெரும் நடிகராக உருவாகியுள்ள நடிகர் அஜித், நடிப்பதை காட்டிலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, துப்பாக்கி சுடுதலில் ஆர்வம், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவது என பல திறமைகளை கொண்டவர். இவரது படங்கள் இன்றுவரை 300 கோடி வரை அசால்ட்டாக வசூலாகியும் வருகிறது.

இருந்தாலும் எவ்வளவு புகழ்ச்சி தன் முகத்திற்கு நேராக அஜித்துக்கு வந்தாலும், அதை தன்னடக்கத்துடன் ஏற்று வருகிறார். மேலும் அஜித்தின் குணங்களும் பலரது விருப்பமானது எனலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று செல்வது, சக நடிகர்களுக்கு மரியாதை கொடுப்பது, படத்தின் பின்னணி பணியாளர்களை கவனித்து கொள்வது என அஜித் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பலருக்கும் எடுத்துக்காட்டு எனலாம்.

Also Read: வேர்ல்ட் டூருக்கு தயாராகும் அஜித்தின் மிரளவிடம் புகைப்படம்.. AK மேனேஜர் வெளியிட்ட ட்ரெண்டிங் ட்விட்டர் பதிவு

அப்படிப்பட்ட அஜித்தை பிரபல ஹோட்டல் நிர்வாகம் உள்ளே விடாமல் அடாவடி செய்துள்ள சம்பவம் அண்மையில் அரங்கேறியுள்ளது. அஜித் தற்போது ஏகே 62 படத்தில் நடிக்க மும்முரமாக உள்ளார். விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க ஆயத்தமாக உள்ளார். இதனிடையே இப்படம் ஆரம்பிப்பதற்குள் அஜித் உலக சுற்றுலா மேற்கொள்ள திட்டம் தீட்டினார்.

அந்த வகையில் துபாயில் குடும்பத்துடன் அஜித் சுற்றுலா மேற்கொண்ட சமயத்தில் அவரது தந்தை உயிரிழந்தார். அதோடு சென்னை வந்த அஜித், தற்போது மீண்டும் தனது பைக்கினை எடுத்துக்கொண்டு, தன் நண்பர்களுடன் உலகம் சுற்றி வருகிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலா மேற்கொண்டு வரும் அஜித் தற்போது நேபாளம் மற்றும் பூடான் நாட்டினை கடந்துள்ளார்.

Also Read: சப்போட்டிங் கேரக்டரில் அஜித் நடித்த 5 படங்கள்.. தளபதிக்கு உயிர் நண்பராக இருந்த ஏகே

மேலும் மோசமான வானிலையால் சேரும், சகதியுமாக இருக்கும் நிலப்பரப்புகளில் அஜித் பைக்கை ஒட்டிக்கொண்டுள்ளார். இதனிடையே பைக்கில் சுற்றி சேரும், சகதியுமாகவும் உடல் முழுவதும் அழுக்காகவும் இருந்த அஜித், தன் நண்பர்களுடன் ஹோட்டலில் தங்க சென்றுள்ளார். அப்போது அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் கறுப்பாகவும், அழுக்காகவும் வந்த அஜித்தை பார்த்து அடையாளம் தெரியாமல் போக அவரையும், அவரது நண்பர்களையும் உள்ளே விட மறுத்துள்ளனர்.

மேலும் இந்த ஹோட்டலில் பெரிய பிரபலங்கள் தங்கியுள்ளனர், ஆகையால் நீங்கள் பின் வாசல் வழியாக வந்து என்ட்ரி போட்டுக்கொண்டு அறையில் தங்குமாறு கூறியுள்ளனர். இதைக்கேட்ட அஜித் சிரித்துக் கொண்டே பின் வாசல் வழியாக சென்றுள்ளார். அஜித்தின் இந்த தன்னடக்கமான செயல் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ள நிலையில், இவர் இடத்தில் வேறு நடிகர்கள் இருந்திருந்தால் இப்படி நடந்துகொள்வது அரிது என நெட்டிசன்கள் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர்.

Also Read: ரஜினி போல தல முழுகிடலாம் என நினைத்த அஜித்.. தன்னம்பிக்கை கொடுத்து வளர்த்துவிட்ட வில்லன்

Trending News