நயன்தாரா கமர்சியல் நாயகியாக மட்டுமல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் பிரதான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.
ஆனால் அதோடு விட்டுவிடாமல் வருடத்திற்கு குறைந்தது இரண்டு படமாவது கமர்சியல் படங்கள் செய்து கொள்கிறார். நயன்தாரா என்னதான் சோலோ ஹீரோயினாக படங்களில் நடித்து வெற்றி பெற்றாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தால் இன்னும் பெயரும் புகழும் கிடைக்கும் என்ற நப்பாசைதான்.
அந்த வகையில் அடுத்ததாக அண்ணாத்த போன்ற கமர்ஷியல் படங்களிலும், அதேபோல் நெற்றிக்கண் போன்ற சோலோ ஹீரோயின் படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாரா பார்வையற்றவராக நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. நயன்தாராவுக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் முதல் முறையாக நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தை நான்கு மொழிகளில் வெளியிட முடிவு செய்துள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம்.
இதற்கு பெரிய செலவு ஆகும் என்று தெரிந்தும் நயன்தாராவை நம்பி மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க முன் வந்துள்ளதாம் ஹாட் ஸ்டார் நிறுவனம். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
நயன்தாராவின் முந்தைய ஹாட் ஸ்டார் சூப்பர் ஹிட் படமான மூக்குத்தி அம்மன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.