சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பிரம்மாண்டத்தில் ராஜமௌலி,ஷங்கரையே ஓரங்கட்டிய தில் ராஜ்.. தலை சுற்ற வைக்கும் வாரிசு படத்தின் வீட்டு பட்ஜெட்

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் தில் ராஜ் மற்றும் சிரிஷ் இப்படத்தை கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கினர். விஜய், ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் குடும்ப பாங்கான கதைக்களம் கொண்டது.

கமர்ஷியல் படமாக இப்படம் எடுக்கப்பட்ட நிலையில், வாரிசு படத்துடன் மோதிய துணிவு படம் ஆக்ஷன் மாஸ் காட்சிகளை கொண்டு வெளியானது. இந்நிலையில் வாரிசை காட்டிலும், துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பையும், வசூல் ரிதியாக பல சாதனைகளையும் படைத்தது. மேலும் வாரிசு படம் மெகா சீரியல் போல் உள்ளதென நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து தள்ளிய நிலையில், வம்சி பைடிப்பள்ளியும் இதற்காக கொந்தளித்தார்.

Also Read: 16 நாட்களில் வாரிசு படத்தின் ஒட்டு மொத்த வசூல்.. ஆட்டநாயகனாக பாக்ஸ் ஆபிஸையே மிரட்டி விட்ட விஜய்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு , ராஜமௌலி, ஷங்கரையே மிஞ்சும் அளவிற்கு இப்படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு கணக்கு வழக்குகளே பார்க்காமல் பணத்தை வாரி இழைத்துள்ளார். வாரிசு படத்தின் விஜய்யின் சம்பளம் மட்டுமே 120 கோடியாகும் மேலும் பல நடிகர்கள் நடித்த நிலையில், பல சன்டை காட்சிகள், பாடல் காட்சிகள் என ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார் தில் ராஜு.

இதில் முக்கியமாக வாரிசு படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பிரம்மாணடமான வீடு திரையரங்கில் பார்ப்போருக்கு ஆச்சரியத்தை அளித்தது. மிக பெரிய மேற்கூரை, அகலமான இடம், பெரிய படிக்கட்டுக்கள், விலை மதிப்பான அலங்கார பொருட்கள் என ஒவ்வொன்றும் இப்படத்தில் செதுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இப்படத்தின் வீடு உண்மையான வீடா அல்லது செட் போட்டுள்ளார்களா எனவும் பல கேள்விகள் எழுந்துள்ளது.

Also Read: வாரிசு, துணிவை விட இவங்க சண்டை பெரும் சண்டையா இருக்கு.. எதிர்பார்ப்பை எகிற விட்ட தனுஷ்

மேலும் இந்த வீடு எங்கே உள்ளது என்றும், வீட்டில் பட்ஜெட் குறித்தும் தலை சுற்ற வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தில் காட்டப்பட்ட வீடு முழுக்க, முழுக்க பிரம்மாண்டமான செட் தானாம். மேலும் அந்த வீடு அமைந்த இடம் தில் ராஜுவின் சொந்த இடமாம். வீடு செட்டாக இருந்தாலும், வீட்டின் உள்ளே இருந்த நாற்காலிகள், அலங்கார பொருட்கள் இவை அனைத்தும் இப்படத்திற்காகவே புதிதாக வாங்கப்பட்டதாம்.

இத்தனைக்கும் 10 கோடி வரை செலவானாதாம், இந்த விலைக்கு சொந்தமாகவே இடம் வாங்கி பிரம்மாண்டமான வீடே கட்டி விடலாம். ஆனால் செட் அமைத்து வீட்டில் பொருட்களை நிரப்புவதற்கே 10 கோடி வரை செலவு செய்த இந்தியாவிலேயே ஒரே தயாரிப்பாளர் தில் ராஜு தான். இப்படி பார்த்து பார்த்து பட்ஜெட் போட்டு படம் பண்ணியும், கதையை மட்டும் பழையதாக யோசித்து தயாரித்து விட்டார் தில் ராஜு.

Also Read: தளபதி வாரிசுன்னா சும்மாவா.. நடிப்பை ஓரம் கட்டி சஞ்சய் எடுத்துள்ள புது அவதாரம்

- Advertisement -spot_img

Trending News