திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சமயம் பார்த்து பிரியங்காவை வச்சு செய்த ஹவுஸ் மெட்ஸ்.. ஆதரவாக நின்ற ஒரே நபர்!

தொடர்ந்து இரண்டு வாரங்களாக பிக் பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும்  தாங்கள் கடந்து வந்த பாதையை கதையாக சக போட்டியாளர்கள் இடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க்  கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்  நேற்று நிகழ்ச்சியில் மாடல் அழகி அக்ஷரா, விஜே பிரியங்கா மற்றும் சிபி ஆகியோர் மூவரும் தங்களது கடந்து வந்த பாதையை கதையாக  சொன்னார்கள்.  எப்போதுமே சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருக்கும் பிரியங்கா, அவர் கடந்து வந்த பாதையை  பகிர்ந்து  கொள்ளும்போது கணத்த குரலுடன் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.

ஏனென்றால்  மிகவும் பாசமாக இருந்த தன்னுடைய தந்தையின் இழப்பு, அதன்பிறகு பிரியங்கா மற்றும் அவருடைய தம்பியை, பிரியங்காவின் அம்மா தனியாளாக வளர்த்து ஆளாக்கியது உருக்கத்துடன் பேசினார்.

அதன் பிறகு பிரியங்கா சொன்ன கதைக்கு பெரும்பாலான போட்டியாளர்கள் டிஸ்லைக் மட்டுமே கொடுத்தனர். இமான் அண்ணாச்சி மட்டுமே ஹாட் சிம்பிள் எமோஜியை கொடுத்து பிரியங்காவிற்கு ஆதரவாக பேசினார்.

பிக்பாஸ் வீட்டில் சில சமயம் பிறரை கலாய்க்கும் போது அவர்களது மனதை புண்படும்படி பேசிய பிரியங்காவை, சக போட்டியாளர்கள் தக்க சமயம் பார்த்து வச்சு செஞ்சுட்டாங்க. ஏனென்றால் நிரூப் தொடக்கத்தில் பிரியங்காவிற்கு லைக் கொடுத்து, அதன் பிறகு அதனை நீக்கிவிட்டு டிஸ்லைக் கொடுத்தார்.

priyanka deshpande
priyanka deshpande

அதைத்தொடர்ந்து ஐகிப் பெரி-யும் லைக் கொடுத்து அதன் பின்பு அதனை நீக்கி டிஸ் லைக் கொடுத்து தனது கோபத்தை வெளிப்படுத்தி விட்டார். அதேபோன்றுதான்ன ராஜு பிரியங்காவிற்கு டிஸ்க் லைட் கொடுத்துள்ளார்.

Trending News