வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நாமினேஷன் மூலம் பழிக்குப் பழி தீர்த்த ஹவுஸ் மேட்ஸ்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர்

மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆண்டவரின் ஆட்டம் பயங்கர ரகளையாக இருந்தது. கமலைத் தவிர இந்த நிகழ்ச்சியை வேறு யாராலும் நடத்த முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவர் தன்னுடைய பாணியில் போட்டியாளர்களை லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்கிவிட்டார்.

அதன் தாக்கம் இந்த வாரம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் முதல் படியாக இந்த வார நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் களைகட்டி இருக்கிறது. போன வாரம் முழுவதும் போட்டியாளர்களை கடுப்பாக்கிய விஷயங்களை அவர்கள் இந்த நாமினேஷன் மூலம் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

Also read : ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அந்த தருணம்.. களை கட்ட போகும் இன்றைய பிக்பாஸ் எபிசோட்

அந்த வகையில் போட்டியாளர்கள் தங்களுடைய மனக்குமுறலையும், பழிவாங்கும் படலத்தையும், வஞ்சத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவிலேயே தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அதன் அடிப்படையில் இந்த வாரம் அசீம், செரீனா, ஆயிஷா, கதிரவன், விக்ரமன் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் இவர்கள் அத்துமீறி பேசியது, சிறிய விஷயத்தையும் பெரியதாக காட்டி சீன் போட்டது, எந்த சண்டையிலும் பங்கு கொள்ளாதது, உடல் நிலையை பகடை காயாய் பயன்படுத்துவது, மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நாமினேட் செய்யப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார்.

Also read : நஷ்டத்தை ஈடு கட்ட போகும் கமல்.. வாய்ப்புக்காக 7 வருடமாக காத்திருக்கும் இயக்குனர்

இந்த விஷயத்திலிருந்து யார் யாரை குறிப்பிட்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் புரிந்து விடும். அந்த வகையில் பிக் பாஸ் நன்றாகவே கொளுத்தி போட்டு விட்டார். இது இந்த வாரம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் விஜய் டிவியின் டிஆர்பியும் உயரும் என்று பிக்பாஸ் நன்றாகவே கணக்கு போட்டு வேலை பார்த்திருக்கிறார்.

தற்போது வெளிவந்திருக்கும் இந்த ப்ரோமோவை பார்க்கும் போதே இந்த வாரம் அசீம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று தெரிகிறது. ஏனென்றால் கடந்த சில வாரங்களாகவே இவருடைய நடவடிக்கைகள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவரை எப்போது தூக்கி வெளியே போடலாம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அசீம் இந்த வாரம் வீட்டை விட்டு துரத்தப்பட இருக்கிறார்.

Also read : கமலை தூக்கிவிட்ட மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்.. 30 வருடமாய் வாய்ப்பு தராததால் OTT-க்கு சென்ற அவல நிலை

Trending News