கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதி நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் சில பல விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also read:நானே வருவேன் படத்தை கண்டிப்பாக பார்க்க 5 காரணங்கள்.. தனுஷ் செய்யப் போகும் சம்பவம்
பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படாத இந்த திரைப்படம் தற்போது பார்ப்பதற்கு பயங்கர திரில்லிங் ஆகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதாக ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் படத்தின் முதல் பாதி வேற லெவலில் இருப்பதாகவும், இடைவேளை காட்சிகள் எதிர்பார்க்காத அளவிற்கு திருப்பங்களுடன் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வித்தியாசமான கோணத்தில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கும் தனுஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Also read:‘நானே வருவேன்’ படம் எப்படி இருக்கு? செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த ஃபர்ஸ்ட் ரிவ்யூ
மிரட்டலான பின்னணி இசையும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும் தனுஷின் அபாரமான நடிப்பும் தற்போது ஆடியன்ஸை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. படம் இப்படி ஒரு கோணத்தில் தான் இருக்கும் என்று எந்த முடிவுக்கும் வர முடியாத படி இறுதிவரை ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆக மொத்தத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி இந்த திரைப்படத்தின் மூலம் தங்களுடைய வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதையும் தாண்டி இந்த படத்திற்கு தற்போது பாராட்டுக்களும், விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.

Also read:இந்த 2 படங்களின் தழுவல் தான் நானே வருவேன்.. இப்பவே வரும் நெகட்டிவ் ரிவ்யூ