திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எவ்வளவு பெரிய மனுஷன் தோனி இங்க வந்து அசிங்கப்படலாமா.? சேர்த்து வச்ச மொத்த பேரும் போச்சே

MS Dhoni: கிரிக்கெட் ரசிகர்களால் தல தோனி என செல்லமாக அழைக்கப்பட்டவர் தான் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்த இவர் திரைப்படங்களையும் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் முதல் முதலாக எல்.ஜி. எம் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் நடந்த விஷயத்தை வைத்து, எவ்வளவு பெரிய மனுஷனாக இருந்த தோனி இப்படி அசிங்கப்படலாமா? என்று நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: தோனி அண்ணாச்சி ஹேப்பி, இப்படியா அண்ட புளுகு புளுகுறது.? பட வாய்ப்புக்காக செய்யும் மட்டமான வேலை

ரமேஷ் தமிழ்மணி இயக்கி இசையமைத்த எல்.ஜி.எம் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக ஹரிஷ் கல்யாணத்துக்கு ஒன்றரை கோடி சம்பளம் பேசப்பட்டு, அதில் 13 லட்சம் ரிலீசுக்கு பின்னர் தருகிறோம் என்று கூறிவிட்டு ஏமாற்றப்பட்டு விட்டார்.

இதே போல இந்த படத்தின் கதாநாயகியாக நடித்த லவ் டுடே பட பிரபலம் இவனாவிற்கும் 6 லட்சத்தை அப்புறம் தருவதாக கூறி, அந்த படக்குழு இன்று வரை கொடுக்கவில்லையாம். இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தோனிக்கு இதனால் ரொம்ப அசிங்கமா போச்சு.

Also Read: சினிமா பேராசையில் வந்து பல்பு வாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. தல தோனிக்கு கிடைத்த ஆப்பு

கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் தல தோனி ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் போது படத்தை தயாரிக்க வந்துவிட்டு இப்படி அசிங்கப்பட்டு விட்டாரே என்று ஆதங்கப்படுகின்றனர். இதனால் அவர் சேர்த்து வைத்த மொத்த பேரும் போச்சு.

நடிகர் நடிகைகளுக்கு சரியாக சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு படத்தை தயாரிக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தை அறிந்த பலரும் தோனி குறித்து கமெண்ட் செய்கின்றனர். ஆனால் கிரிக்கெட் பிரியர்கள் நிச்சயம் இது தோனிக்கு தெரியாமல் தான் நடந்திருக்கணும் என்று சப்போர்ட் செய்கின்றனர்.

Also Read: தக்காளியை போல் சந்தானத்திற்கு வந்த வாழ்வு.. ஒரு படம் ஓடினா இப்படியா சம்பளத்தை கூட்டுறது

Trending News