திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

அட்லியின் ஜவான் படம் எப்படி இருக்கு.? மீண்டும் பாம்பே பாவு பஜ்ஜியா இல்ல சென்னை வடை தானா

அட்லி தமிழில் காப்பி அடிக்கும் டைரக்டர் என்று பெயர் எடுத்து அமைதியாக இருந்து வந்தார். திடீரென ஹிந்திக்கு சென்று 300 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் வைத்து படத்தை எடுத்து அனைவரின் வாயை மூட வைத்தார். முக்கியமாக இந்த படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமானவர்களை பயன்படுத்தி படத்தை எடுத்தார்.

ஜவான் படம் வெளிவந்தது அனைவரும் எதிர்பார்த்தபோல் அட்லி தனது கடமையை கரெக்டாக செய்துள்ளார். பழைய இட்லியை உதிர்த்துபுது புது இட்லி உப்புமாவாக சுட சுட கொடுத்துள்ளார். ஏற்கனவே அவர் காப்பி அடித்து தான் படம் எடுத்தார் அந்த படங்களிலேயே மறுபடியும் காப்பி அடித்து ஜவான் படத்தை எடுத்துள்ளார்.

Also Read: மொத்த வித்தையையும் இறக்கிய ஷாருக்கான்.. ஜெயித்தாரா அட்லி.? ஜவான் ட்விட்டர் விமர்சனம்

ஆனால் இந்த படத்தில் முக்கியமாக எப்பொழுதும் அரசியல் பேச மாட்டார் இதில் அதிகமாக அரசியல் பேசியுள்ளார் தனது குருநாதர் ஷங்கர் எப்படி அரசியல் பேசி பிரமாண்டமாக படத்தை மக்களுக்கு கொடுப்பாரோ அதே பாணியில் இவரும் செய்துள்ளார். படத்தில் சண்டை காட்சிகள் நன்றாக இருந்தாலும் அதிகமாக வருவது கடுப்பாக இருக்கிறது.

படத்திற்கு இசை அனிருத் பி ஜி எம் தான் என்று இதிலும் நிரூபித்து விட்டார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை ஒரு பாடலை தவிர. ஷாருக்கானுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி அவ்வளவு மிரட்டலாக நடித்துள்ளார். நயன்தாராவும் ரொம்ப ஸ்டைலிசாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவே நடித்துள்ளார். தமிழ் நடிகர்களுக்கு நடிக்கும் வாய்ப்பை அட்லீ அதிகமாக வழங்கியுள்ளார்.

Also Read: வருட உழைப்பு, அட்லி-ஷாருக்கான் கூட்டணி ஜெயிக்குமா? மிரட்டி விட்ட ஜவான் பட முழு விமர்சனம்

ஒன்றிய அரசால் மக்கள் என்னவெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார் என அடுக்கடுக்காக அனைத்து விஷயங்களையும் அட்லி இந்த படத்தில் ஷாருக்கான் மூலம் பேசியுள்ளார். 40,000 கோடி அம்பானி ஏமாற்றியது, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, பேங்க் மூலமாக ஏழைகளை தொந்தரவு செய்வது இந்த காட்சிகளை எல்லாம் ரசிக்கும்படியாக இந்த படத்தில் அமைந்துள்ளது.

ஷாருக்கான் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார் அவர் நடிப்பை குறை சொல்லவே முடியாது. கவர்ச்சிக்கு எப்போதும் போல தீபிகா படுகோனே பயன்படுத்தியுள்ளார். ஹிந்தி படம் என்றும் தோன்றாத அளவிற்கு தமிழ் படம் பார்த்த உணர்வு வருகிறது. மொத்தத்தில் இந்த படம் பல படங்களின் கலவையாக இருந்தாலும் ரஜினி நடித்த ஜெய்லர் படத்தின் புது வடிவம் தான் இது. நமது தமிழ்நடிகர்களுக்காகவும், பிரமாண்டதிற்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

Also Read: பழக்க தோஷம் மாறல, தண்டவாளத்தில் ஏறிய அட்லியின் வண்டவாளம்.. விஜயகாந்தின் இந்த படம் தான் ஜவான்

- Advertisement -spot_img

Trending News