திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாமன்னன் படம் எப்படி இருக்கு.? முதல் விமர்சனத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய தனுஷ்

Movie Mamannan: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படம் தான் நான் நடிக்கக்கூடிய கடைசி படம் என்று அறிவித்துவிட்டார். மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கமல் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க செய்தது.

Also read: இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாமன்னன்.. உதயநிதியால் கிளம்பிய அடுத்த பிரச்சினை

பொதுவாகவே மாரி செல்வராஜ் படம் எந்த மாதிரியான கருத்தை மையமாக வைத்திருக்கும் என்பது இவருடைய படங்களான கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படங்களை பார்க்கும் பொழுதே தெரிந்திருக்கும். அதிலும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஒரு பாடல் மூலம் மக்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும் விதமாக கொடுத்திருப்பார்.

அந்த வகையில் இப்படமும் அப்படித்தான் கதை அமைந்திருக்கும். இந்த கதைக்கேற்ற மாதிரி உதயநிதி நடித்திருப்பது எந்த வகையில் ஒத்துப் போகுது என்பதை திரையில் பார்ப்பதற்கு பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் திரையரங்குகளில் வருவதற்கு முன்னரே சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: எல்லா படங்களிலும் ஒரே சீனை காப்பியடிக்கும் மாரி செல்வராஜ்.. மாமன்னன் ட்ரைலரால் அம்பலமான சீக்ரெட்

அந்த வகையில் மாரி செல்வராஜ் படம் எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்ததால் தனுஷ் இப்படத்தை முதலில் பார்த்து இப்படத்திற்கு அவருடைய விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
அதில் எப்பொழுதுமே உணர்ச்சி பூர்வமான கதை எடுப்பதில் மாரி செல்வராஜ்க்கு கைவந்த கலை. அப்படத்திற்கு மெழுகு ஏற்றும் விதமாக வடிவேலு மற்றும் உதயநிதி அவர்களின் நடிப்பை கூடுதலாக கொடுத்து வலுப்படுத்தி இருக்கிறார்கள்.

அத்துடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை கொடுத்திருக்கிறது. இப்படம் திரையரங்குகளில் பார்க்கும் பொழுது ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நல்ல ஒரு கதை அம்சமான படம் என்று சொல்லி இருக்கிறார். மேலும் இப்படத்தின் வரவேற்பை பொறுத்து உதயநிதி சினிமாவிற்கு திரும்ப வருவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

mamannan-dhanush review
mamannan-dhanush review-cinemapettai

Also read: ரஜினியை பார்த்து வளர்ந்து தற்போது எதிர்த்து நிற்கும் 5 ஹீரோக்கள்.. மாமனாரை ஓரம்கட்ட நினைக்கும் தனுஷ்

Trending News