புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு மின்சார கட்டண உயர்வு.. கொடுத்த காசை திரும்ப பெற ஒரே வழி, அனுபவிங்க பாஸ்

TNEB Tariff Hike: இங்கே மட்டும்தான் இலவசம் என்கிற ஒரு வார்த்தை பயன்படுத்தினால் போதும் மக்கள் எல்லா பிரச்சனையும் மறந்து விடுவார்கள். அப்படித்தான் மகளிர் போக்குவரத்து இலவசம், மாதாந்திர ஆயிரம் ரூபாய், பொங்கல் காசு, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசு, கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு காசு என அனைத்திற்கும் காசு வாங்கிய பழக்கம் ஆகிவிட்டார்கள்.

இப்படி ஒரு பக்கம் அவர்களுக்கு இலவசம் என்ற விஷயத்தில் அடிமையாக்கி விட்டு இன்னொரு பக்கம் அத்தியாவாச பொருள்களில் அதிகமான விலையை கூட்டுகிறார்கள். குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, ஆவின் பால் விலை, மின்கட்டணம், சிலிண்டர் போன்ற ஒவ்வொரு பொருள்களின் கட்டணம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்படித்தான் இப்பொழுது இந்த ஆண்டிற்கான மின் கட்டண உயர்வு அதிகரித்து உள்ளதாக மின்சார வாரிய ஆணையரிடமிருந்து அறிவிப்பு வந்திருக்கிறது.

கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு எல்லாத்தையும் வாங்கிடனும்

அதாவது 2022 ஆம் ஆண்டு 30 சதவீதமும், கடந்த ஆண்டு 2.18% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 4.83 சதவீதம் அளவிற்க்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் மக்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்து ஓட்டு போட்டதற்கு சாமானிய மக்களுக்கு கிடைத்த பரிசு. தமிழ்நாட்டில் 4.83 சதவீதம் மின் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அறிவிப்பு விட்டிருக்கிறது.

அந்த அறிவிப்பின்படி வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், வழிபாட்டுத்தலங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்துமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஓர் ஆண்டுக்குள் சொத்து வரி உயர்வு மூலம் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த ஆளும் கட்சி தற்போது இந்த ஆண்டும் மின்சார கட்டணத்தை கூட்டி சாமானிய மக்கள தலையில் பெரிய இடியே போட்டு விட்டார்கள்.

அதாவது ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுத்த காசை எப்படி திரும்பப் பெறுவது, அதற்கு ஒரே வழி அத்தியாவசிய பொருட்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களின் கட்டணத்தை கூட்டி விட்டால் போட்ட காசை எடுத்து விடலாம். இதை தான் கொடுக்கிற மாதிரி கொடுத்து எல்லாத்தையும் கறக்கணும் என்ற ஃபார்முலா. காசு வாங்கி ஓட்டு போட்டதற்கு இதெல்லாம் அனுபவிக்கனும் போல.

எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு

401 – 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 ஆக உயர்வு

501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.18ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்வு

601 -800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ9.20ல் இருந்து ரூ.9.65 ஆக உயர்வு

801 – 1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவங்கள்

Trending News