வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரம்மாண்ட பட்ஜெட், தாறுமாறான சம்பளம்.. AK 62 மூலம் மிரட்டவரும் அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்த துணிவு திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு அஜித்தை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் சொல்ல முடியாத சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இதுவே துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் படத்தின் லாபமும் படகு குழுவினரை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது எகிறி உள்ளது. அந்த வகையில் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்தது.

Also read: அஜித்தை அக்குவேறு ஆணிவேராக அலசும் நயன்தாரா.. கணவருக்காக நடந்த ரகசிய மீட்டிங்

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறதாம். அந்த வகையில் இப்படத்திற்காக லைக்கா நிறுவனம் 200 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கி இருக்கிறது. அதிலும் அஜித்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: இப்ப வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.. நம்பி மோசம் போயிட்டோமே!

இதை வைத்து பார்க்கும் பொழுது அஜித்தின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படமும் இதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் இப்படத்திற்கான ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து இருப்பதால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.

அவருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் நயன்தாராவும் படத்தின் வேலைகள் சம்பந்தமாக அஜித்துடன் ரகசிய பேச்சு வார்த்தையும் நடத்தி இருக்கிறார். இப்படி ஆரம்பத்திலேயே பரப்பரப்பை கிளப்பி இருக்கும் இந்த படத்திற்கான ப்ரீ சேல் வியாபாரமும் தற்போது ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் துணிவு திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ஏகே 62 இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Also read: என்னோட படத்துல நீதான் நடிக்கணும்.. அஜித்துக்கு கட்டளை போட்ட ரஜினி

Trending News