Jailer: சன் பிக்சர்ஸ் காட்டில் இப்போது அடைமழை கொட்டி வருகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 10-ம் தேதி வெளியான இப்படம் இப்போது வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைவரின் வெறித்தனமான தரிசனத்தை கண்ட ரசிகர்கள் படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து வரும் சம்பவமும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் ரிலீஸ் ஆன ஏழு நாட்களிலேயே 450 கோடி வசூலை தாண்டி இருக்கிறது.
Also read: வெற்றிக்காக ரஜினி துணிந்து செய்த காரியம்.. அடுத்த தலைமுறையினரை சீரழிக்கும் லோகேஷ், நெல்சன்
இப்படி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இப்படம் அடுத்ததாக ஓடிடியில் அலப்பறை செய்வதற்கும் தயாராகி இருக்கிறது. அந்த வகையில் சன் நெட்வொர்க் ஜெயிலரின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து சேட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளது.
அதேபோன்று சன் பிக்சர்ஸ் தான் தயாரிப்பு என்பதால் அவர்களுடைய ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட்டிலேயே ஜெயிலர் வெளிவர இருக்கிறது. அது மட்டுமல்லாமல் டாப் ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி வரும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் ஒரு பெரிய தொகையை கொடுத்து ஜெயிலர் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது.
Also read: நம்ப ஹீரோக்களை ஏமாற்றும் லோகேஷ் கனகராஜ்.. திடீரென அக்கட தேசத்துக்கு தாவுவதால் வரும் பிரச்சனை
அந்த வகையில் ஒரு படம் தியேட்டருக்கு வந்து 28 நாட்கள் கழிந்த பிறகு தான் ஓடிடி தளத்திற்கு வரும். அதன் படி பார்த்தால் ஜெயிலர் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் ஏழாம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இப்போது வரை வெளியிடவில்லை. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் முத்துவேல் பாண்டியனின் அலப்பறையை ரசிகர்கள் ஓடிடி தளத்தில் காண முடியும் என்கிறது சினிமா வட்டாரம். அந்த வகையில் தியேட்டர்களில் சம்பவம் செய்த சூப்பர் ஸ்டார் அடுத்தது ஓடிடி-யிலும் சம்பவம் செய்ய தயாராகி விட்டார்.
Also read: தலைவருக்கு கொடுத்த ஜெயிலர் வெற்றி ஏன் விஜய்க்கு கொடுக்கல.. மறைமுகமாக நெல்சன் புலம்பிய காரணம் இதுதான்