வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உதயநிதிக்காக தலையை கொடுத்து அவமானப்பட்ட பிரபலம்.. கூட இருந்து குழி வெட்டிய மாரி செல்வராஜ்

Maamanan: மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் மூலம் பலருக்கு பல்பு வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த வகையில் உதயநிதியை பற்றியே யாரும் பெரிசாக பேசவில்லை. ஓரளவு வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பை தான் ரசிகர்கள் குறிப்பிட்டு கூறி வருகிறார்கள். இந்நிலையில் மிகப்பெரிய பிரபலம் ஒருவருக்கு அவமானத்தை தேடி கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

உதயநிதிக்காக இந்த படத்தில் நுழைந்து இப்போது அவமானம் பட்டது தான் மிச்சம். அதாவது மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு முதல்முறையாக மாமன்னன் படத்தில் உதயநிதிக்காக ஏ ஆர் ரகுமான் இசையமைக்க சம்மதித்தார்.

Also Read : குழி தோண்டி புதைக்க நினைத்த கூட்டம்.. மீண்டும் நடிகனாக நிரூபித்த ‘மாமன்னன்’ வடிவேலுவின் வெற்றிக்கு காரணம்

இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடல் பாடியிருந்தார். அந்த பாடலை வைத்து படக்குழு ப்ரோமோஷன் செய்திருந்தது. இதனால் படத்திலும் ஏகப்பட்ட பாடல்கள் இடம் பெற்றிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து திரையரங்குக்கு சென்றனர். ஆனால் வடிவேலு பாடலை தவிர வேறு எந்த பாட்டும் கேட்கும்படி இல்லை.

பொதுவாக சில படங்கள் ஓடவில்லை என்றாலும் ஏ ஆர் ரகுமான் பாடல்கள் மட்டும் அந்த படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்படும். ஆனால் முதல்முறையாக மாமன்னன் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் வெறுத்துள்ளனர். இதற்கு காரணம் மாரி செல்வராஜ் அவருக்கு ஏற்றபடி டியூன் போட சொன்னதுதான்.

Also Read : மாமன்னனை வைத்து வடிவேலு போட்ட கணக்கு.. அதிரடியாக இறக்கிய நங்கூரம்

வேறு வழியில்லாமல் படத்தின் இயக்குனர் என்பதால் மாரி செல்வராஜ் சொன்னதற்கு ஏற்ப ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதுமட்டுமின்றி மாமன்னன் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமானிடம் வருங்காலங்களில் சினிமா மற்றும் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என மாரி செல்வராஜ் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரகுமான், கமர்சியல் ஹிட் கொடுப்பதற்காக இரண்டு தரப்பினர் இடையே சண்டையை மூட்டிவிடுமான படங்கள் தனக்கு பிடிக்காது என நேரடியாகவே கூறிவிட்டார். அதுமட்டுமின்றி நடிகரின் ரசிகர் என்று கூறி நேரத்தை செலவிடாமல் அவர்களுக்கான வேலையை செய்ய வேண்டும். மேலும் ஒரு நல்ல நாடாக மாற்றி, மொழிகளை வளரச் செய்ய வேண்டும் என்று ஏ ஆர் ரகுமான் கூறியிருந்தார்.

இவ்வாறு மாரி செல்வராஜ் படத்தில் இசையமைத்த ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் சாதிய படங்களை வெறுப்பதை நேரடியாகவே குறிப்பிட்டார். ஆனாலும் உதயநிதியின் பேச்சை நம்பி மாமன்னன் படத்திற்கு இசையமைத்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ரகுமான் ஏமாற்றம் கொடுத்தது தான் மிச்சம்.

Also Read : Maamannan Movie Review- வடிவேலு என்னும் நடிகனை அடையாளப்படுத்திய மாரி செல்வராஜ்.. மாமன்னன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News