வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கள்ளத்தொடர்பால் கர்ப்பிணி மனைவியை அடித்த கணவன்.. சீரியலை விட மோசமான நிஜ வாழ்க்கை

சீரியலில் ஹீரோ வேஷம் கட்டும் நடிகர்கள் யாரும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பதில்லை. அதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்திருந்தாலும் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சன் டிவியில் சக்தி, கேளடி கண்மணி போன்ற சீரியல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் தான் நடிகர் அர்ணவ். கேளடி கண்மணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை திவ்யஸ்ரீயை காதலித்த இவர் கடந்த ஐந்து வருடங்களாக அவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். படு ரகசியமாக இருந்த இந்த விஷயம் சில தினங்களுக்கு முன் அம்பலமானது.

அதாவது திவ்யஸ்ரீ தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தனக்கும் அர்ணவுக்கும் திருமணம் நடந்து விட்டதாக போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டார். மேலும் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

Also read:விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

இந்நிலையில் திவ்யஸ்ரீ தன் கணவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அர்ணவ் சக நடிகையுடன் தகாத உறவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களுடைய திருமணத்தை மீடியாவுக்கு அறிவித்ததில் இருந்து கணவரின் நடவடிக்கை மாறிவிட்டதாகவும், தன்னை ஒதுக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை அவர் நடிக்கும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றபோது சக நடிகையுடன் அவர் நெருக்கமாக இருந்ததை பார்த்த திவ்யா இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அப்போது அங்கு இருந்த செல்லம்மா சீரியல் ஹீரோயின் கர்ப்பிணி என்றும் பாராமல் திவ்யாவின் வயிற்றில் வாட்டர் பாட்டிலை வைத்து தாக்கியிருக்கிறார். மேலும் நாங்கள் இருவரும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று திமிராகவும் பேசி இருக்கிறார்.

Also read:புஷ்பா புருஷனான கோபி.. பதறியடித்துக்கொண்டு கல்யாணத்தை நிறுத்த வந்த வாரிசு

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அர்ணவ் வீட்டிலும் திவ்யாவை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்திருக்கிறார். இதனால் காயமடைந்த திவ்யா மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு தன் கருவிற்கு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் அழுது கொண்டே தெரிவித்தார்.

ஏற்கனவே திவ்யாவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்று தனியாக இருந்த அவரை அர்ணவ் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். அதை நம்பிய திவ்யா மதம் மாறி அவரை திருமணம் செய்து இருக்கிறார்.

காதல் கணவரை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு தற்போது வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து காவல்துறையில் புகார் அளித்திருக்கும் திவ்யாவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சீரியலில் ஹீரோ முகம் காட்டிய அர்ணவ் நிஜத்தில் இப்படி ஒரு கொடூர வில்லனா என்று பலரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த விஷயம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read:50 வயதில் ஹனிமூன் சென்ற கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்

Trending News