வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகையின் பணத்தை திருடிய கணவர்.. கையும் களவுமாய் மாட்டிய சம்பவம்

நடிகை சினிமாவில் ஜொலித்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்த பெரும் துயரங்களை சந்தித்தார். அதாவது தன்னுடன் நிறைய படங்களில் நடித்த காதல் மன்னன் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார்.

ஆனால் அந்தக் காதல் கல்யாணம் வரை கைக்கூடவில்லை. இருந்த போதும் மனதை தேற்றி கொண்டு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் நடிகையின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

இதனால் நடிகை அவருடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து வந்தார். தனது வங்கிக் கணக்கு அனைத்துமே அவரையே நிர்வகிக்கவும் கொடுத்தார். ஆனால் அவர் நடிகைக்கு தெரியாமல் அவரது கணக்கில் இருந்து பணத்தை ஆட்டையை போட்டுள்ளார்.

அதன் பிறகு இருவருக்கும் திருமணமும் நடந்து விட்டது. ஒரு நாள் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது நடிகைக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக வங்கியில் சென்று விசாரிக்கும் போது நடிகையின் கையெழுத்துப் போட்ட செக்கில் இருந்து தான் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதன் பிறகு தான் கணவரின் சுய ரூபத்தை நடிகை பார்த்தார். மேலும் தான் சம்பாதித்த பணம் எல்லாவற்றையும் இழந்த நடிகைக்கு கொடிய நோயும் தொற்றிக் கொண்டது. இதனால் மனமுடைந்து போன நடிகை சிறிது காலத்திலேயே உயிரிழந்து விட்டார்.

Trending News