வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆடை அமலா பால் போல அந்தரங்கமாக நடிக்க தயார்.. ஓபனாக பேசிய 36 வயது பிக் பாஸ் நடிகை

அமலா பால் எப்போதுமே துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அப்படி தான் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் ஆடையின்றி துணிச்சலாக நடித்திருந்தார். ஆனால் அதன் பின்பு அப்படி நடித்ததாலோ என்னவோ அமலா பாலுக்கு ஆடை படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு வரவில்லை.

இதைத்தொடர்ந்து பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் நடிகை பிரகிடா ஆடையின்றி நடித்திருந்தார். சிலர் இதை பாராட்டினாலும் பலர் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்நிலையில் 36 வயது பிக் பாஸ் நடிகை ஒருவர் ஆடையின்றி நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

Also Read : அமலா பால் கேரியரை சோலி முடிந்த 5 படங்கள்.. குடும்பப் பெண்களை முகம் சுளிக்க வைத்த சிந்து சமவெளி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வையல் கார்டு என்ட்ரியாக வந்தவர் பிந்து மாதவி. பிரபல நடிகையான இவர் விமலுடன் இணைந்து தேசிங்கு ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் பிக் பாஸ் டைட்டில் பட்டதை நூலிலையில் கைவிட்ட பிந்து மாதவி தெலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார்.

இப்போது பிந்து மாதவி கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அந்த வகையில் பகைவனுக்கு அருள்வாய், மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிந்து மாதவி டாப் நடிகர்கள் போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறார்.

Also Read : கதைக்காக ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்த 5 நடிகைகள்.. அத்தோட பட வாய்ப்பை இழந்த அமலா பால்

மேலும் இப்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் ஹீரோவை காட்டிலும் ஹீரோயினுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வருவது ஒரு நல்ல சூழலாக நான் பார்க்கிறேன் என்ற பிந்து மாதவி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி படத்தில் ஹீரோயின்கள் ஆடையின்றி நடிப்பதை பற்றி அவருடைய கருத்தையும் கூறி உள்ளார்.

அதாவது எந்த கதாநாயகியும் ஆடையின்றி நடித்தால் பட வாய்ப்பு வரும் என்பதால் இதுபோன்று நடிப்பதில்லை. அவர்கள் தேர்ந்தெடுத்த கதைக்கு தேவைப்பட்டால் தான் அப்படி நடிக்கிறார்கள். அதேபோல் வருங்காலங்களில் எனக்கும் அதுபோன்று நடிக்கும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று பிந்து மாதவி ஓபனாக பேசியுள்ளார்.

Also Read : ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

Trending News