வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நா அவ்ளோ சேடிஸ்ட் இல்ல, மீடியாவில் விளக்கம் கொடுத்த லோகேஷ்.. லியோ-வில் உள்ள அல்டிமேட் சீன்

லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வாய்ப்பை கிடைக்காதா என டாப் நடிகர்கள் முதல் எல்லோருமே காத்து கிடக்கிறார்கள். ஏனென்றால் அவரது படத்தில் நடித்தால் அதன் பிறகு அவர்களது மார்க்கெட் வேற லெவலில் உயர்ந்து விடுகிறது. அந்த வகையில் கமலுக்கு விக்ரம் என்ற இன்டஸ்ட்ரியல் படத்தை லோகேஷ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் லோகேஷ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சிறு ஏக்கம் இருந்து தான் வருகிறது. அதாவது லோகேஷ் படங்களில் காதல் காட்சிகள் அதிகம் இடம் பெறாது. ஹீரோயின்களை குத்திக் கொள்வது போல தான் சீன்கள் இடம்பெறுகிறது. இதுகுறித்த கேள்வியை நேரடியாகவே அவர் முன் வைக்கப்பட்டது.

Also Read : விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

அதற்கான விளக்கத்தை லோகேஷ் கொடுத்துள்ளார். அதாவது காதலை கொள்ளும் அளவிற்கு நான் சேடிஸ்ட் இல்லை, கதைக்கு எது தேவைப்படுகிறது அதை தான் படங்களில் எடுத்து வருகிறேன். கண்டிப்பாக ஏதாவது ஒரு படத்தில் காதலை சேர்த்து வைத்து விடலாம் என்று லோகேஷ் கூறியிருந்தார்.

அப்போது என்றால் லியோ படத்தில் லவ் சீன்கள் இடம்பெருமா என்ற கேள்வி எழுந்தது. அந்த படம் ரிலீஸ் ஆக அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் எப்படி சொல்வது என லோகேஷ் ஜகா வாங்கினார். ஆனால் கண்டிப்பாக லியோ படத்தில் அல்டிமேட் சீன் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சு விடுங்க.. தயாரிப்பாளர் மீது செம காண்டில் விஜய்

திரிஷா, விஜய் இடையே எப்போதுமே கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகும். அதுவும் லியோ படத்திற்கு காஷ்மீரில் சூட்டிங் எடுத்துள்ளதால் விஜய், திரிஷா இடையே ரொமான்ஸ் பாடல்களும் இடம்பெறும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். லோகேஷ் ஜானரில் லியோ படம் உருவாகி இருந்தாலும் காதலும் சற்று தூக்கலாக தான் இருக்கும்.

மேலும் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 21ஆம் தேதி லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கிறார்கள். இதன் மூலம் லியோ படம் எந்த மாதிரியான கதை என்பது ஓரளவு தெரிந்து விடும். மாஸ்டரை தொடர்ந்து லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் தாறுமாறான ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : தமிழில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் 5 நடிகர்கள்.. விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளும் நடிகர்

Trending News