ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நான் ஹீரோ, விஜய்க்கு வில்லனா நடிக்க முடியாது.. இயக்குனரை விரட்டி மைக் மோகன் செய்த பெரும் தவறு

பொதுவாக விஜய் படத்தில் நடிப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் தவம் இருந்து காத்து வருவார்கள். ஏனென்றால் இவர் படத்தில் நடித்து விட்டால் எப்படியும் நாம் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்பதற்காக. அப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய்யின் படத்தில் வில்லன் கேரக்டருக்கு நடிப்பதற்கு 80, 90களில் ஹீரோவாக வலம் வந்த மைக் மோகனை அணுகி இருக்கிறார்கள்.

ஆனால் இவர் நீங்கள் எந்த நம்பிக்கையில் என்னிடம் வந்து வில்லன் கேரக்டருக்கு நடிக்க கூப்பிடுகிறீர்கள். நான் அந்த காலத்தில் எப்படிப்பட்ட ஹீரோ உங்களுக்கு தெரியாதா என்று கோபப்பட்டு பேசி திருப்பி அனுப்பி இருக்கிறார். அந்தப் படம் தான் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம். அதன் பிறகு தான் வில்லன் கேரக்டருக்கு இவருக்கு பதிலாக எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைத்தார்கள்.

Also read: பிகில் முதல் தளபதி68 வரை விஜய் வாங்கிய சம்பளம்.. ரஜினியையே ஓரம் கட்டிய ஏறுமுகம்

அவரும் இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுவிட்டார்.
ஆனால் மோகன் மட்டும் இந்த கேரக்டருக்கு நடித்திருந்தால் கோடிக்கணக்கான சம்பளத்தை பெற்றிருப்பார். அத்துடன் இவருக்கு பெரிய அளவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதற்கும் சான்ஸ் வந்திருக்கும்.

அது மட்டும் இல்லாமல் அப்பொழுது ஹீரோவாக நடிக்கும் பொழுது வெறும் லட்சத்தில் மட்டும் தான் சம்பளம் வாங்கி இருந்திருப்பார். மேலும் அவர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். திரும்ப இது ஒரு சான்ஸ் ஆக நினைத்து சினிமாவிற்குள் என்ட்ரி ஆகி இருந்தால் இந்நேரம் இவருடைய ரேஞ்சே வேற லெவல்ல மாறி இருக்கும்.

Also read: மரண அடி வாங்க போகும் விஜய்.. அடுத்த முதல்வர் என சுற்றித்திரிந்தவரை மறந்த இளையதளபதி

அதாவது தற்போது முக்கிய வில்லனாக மறு ஜென்மம் எடுத்து வரும் அர்ஜுன், அரவிந்த்சாமி இவர்களில் ஒருவராக மைக் மோகன் இடம் பிடித்திருப்பார். அதை விட்டு போட்டு நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இவருடைய பிடிவாதத்தால் தற்போது வரை இவர் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியாத அளவிற்கு இருக்கிறார். இவர் ஏதோ ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அது வெளிவருமா வராதா என்ற நிலையில் தற்போது சுற்றி வருகிறார்.

அப்படிப்பட்ட இவர் மெர்சல் படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் இன்று ஒரு நல்ல வில்லனாக தமிழ் சினிமாவில் இவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். அத்துடன் பல கோடியே சம்பாதித்து புகழாரம் சூடி இருக்கலாம். இவரை தேடி வந்த வாய்ப்பை கண்மூடித்தனமாக இழந்து விட்டார்.

Also read: நிஜத்திலும் நடிக்கப் போகும் விஜய்.. 400 கோடிகளை தூக்கி எறிவதற்கு பின்னால் உள்ள ராஜதந்திரம்

Trending News