தமிழில் தான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறேன்.. உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த மலையாள நடிகை

மலையாளத் திரையுலகில் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய சீரியல் நடிகை மோனிஷா, அதன்பிறகு தமிழ் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியலில் மீனாட்சியின் மருமகளாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் அந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.

அதன்பிறகு மிர்ச்சி செந்தில் உடன் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ என்ற சீரியலில் மகா கதாபாத்திரத்தில் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தார். ரக்ஷிதா அந்த சீரியலில் இருந்து விலகியதால் தான் மோனிஷாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

Also Read: கிண்டல் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் நிறைவு பெற்றதால், தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பச்சைக்கிளி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மோனிஷா இதுவரை நடித்த சீரியல்களிலேயே அவருக்கு மிகவும் மனதைத் தொட்ட மிகவும் பிடித்த சீரியல் என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி மலையாள நடிகையான இவர், மலையாள ரசிகர்களை விட தமிழ் சீரியல்களில் நடிப்பதன் மூலம் கிடைத்த ரசிகர்களிடம் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

Also Read: சினிமாவில் இருப்பதால் மகள் சாராவுக்கு ஏற்பட்ட வலி.. கண் கலங்கிய விஜே அர்ச்சனா

ஏனென்றால் அவர் மலையாளத்தில் சீரியல்களில் நடிக்கும் போது அடிக்கடி தவறான போன் கால் வருமாம். இதனால் அவர் பலமுறை மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். அப்போது மோனிஷாவின் குடும்பத்தினரும் சினிமாவில் அவர் நடிப்பதால் தானே இப்படி ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என பயந்தனராம்.

ஆனால் மூன்று சீரியல்கள் தொடர்ந்து தமிழில் நடித்திருக்கிற மோனிஷாவிற்கு ஒருமுறை கூட அதுபோன்ற எந்த போன் காலும் வரவில்லை என்று தமிழ் ரசிகர்களை பெருமையுடன் பேசியிருக்கும் அவருடைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.

Also Read: டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. அடித்து நொறுக்கும் சன் டிவி