புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜோதிகா அளவுக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது.. சந்திரமுகி வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகை

Actress Jothika: ஜோதிகா கிட்டத்தட்ட 25 வருடங்களாக சினிமாவில் முக்கியமான கதாநாயகியாக பயணித்து வருகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு ரீச் ஆகிறது என்றால், திருமணத்திற்கு பின்னும் இவருக்கு வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு தகுந்தார் போல் நடிப்பை கொடுத்து வருகிறார். இவரை நடிப்பின் ராட்சசி என்றும் கூட சொல்லலாம்.

கொடுத்த கதாபாத்திரத்தை சீரும் சிறப்புமாக நடித்துக் கொடுப்பார். அதிலும் அவருடைய முட்ட கண்ணை உருட்டி உருட்டி நடிக்கும் அழகுக்கு அத்தனை பேரும் மயங்கி இருப்பார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவால் தான் நடிக்க முடியும் என்று சில படங்களில் இவரை தவமிருந்து கூட்டு வந்து நடிக்க சொல்வார்கள்.

Also read: ஜோதிகா எல்லாம் ஒண்ணுமே இல்ல, கங்கனாவுக்கு லாரன்ஸ் மாஸ்டர் போட்ட சோப்பு.. நச் பதிலடி கொடுத்த ஜோ

அப்படித்தான் 17 வருஷத்துக்கு முன் ஜோதிகாவிற்கு கிடைத்த கதாபாத்திரம் சந்திரமுகி. இப்படத்தில் இவருடைய நடிப்புதான் மிகப்பெரிய ஹைலைட் என்று சொல்லும் அளவிற்கு பட்டியை கிளப்பி இருப்பார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் பெருசாக வரவேற்பு கிடைக்கவில்லை.

அதற்கு இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கிறது. ஒன்று வேட்டையன் மற்றொன்று சந்திரமுகி. இந்த இரண்டு கதாபாத்திரங்களுமே இரண்டாம் பாகத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. அதனால் தான் எண்ணமோ பெருசாக மக்களிடம் எடுபடவில்லை. இன்னும் படத்தை பார்த்த பிறகு தான் எந்த அளவிற்கு இருக்கிறது என்று கணிக்க முடியும்.

Also read: ஜோதிகா சிம்ரன் செய்த அலப்பறையால் டீலில் விட்ட வெங்கட்பிரபு… தளபதி 68 படத்திற்காக இளவரசியிடம் சரணடைந்த சம்பவம்

முக்கியமாக ஜோதிகா அளவிற்கு ரொம்பவே நடிப்பது கஷ்டம் தான். அதனால் தான் முதலில் கங்கனா-விற்கு பதிலாக மற்ற ஒரு நடிகையை நடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரை என்னால் சிறப்பாக செய்ய முடியாது. நான் அடித்து அவருடைய பெயரை கெடுக்க விரும்பவில்லை.

அந்த அளவிற்கு சந்திரமுகி கதாபாத்திரம் எனக்கு செட்டே ஆகாது என்று கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று விலகி போயிருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை நடன புயல் மற்றும் மலர் டீச்சர் ஆக பார்க்கப்பட்டு வரும் சாய் பல்லவி தான். இவரை தான் முதலில் சந்திரமுகி 2 படத்தில் தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் இவர் எனக்கு அது செட் ஆகாது என்று சொல்லி வாய்ப்பை நிராகரித்திருக்கிறார்.

Also read: சிம்ரனால் கடுப்பான ஜோதிகா.. முட்ட கண்ணை உருட்டி சந்திரமுகியாக மாறி வெங்கட் பிரபுவுக்கு கொடுத்த நோஸ் கட்

Trending News