சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

500 கோடி கொடுத்தாலும் உன் படத்துல நடிக்க முடியாது.. ஜெயிலர் மீது செம கடுப்பில் இருக்கும் விஜய்

Actor Vijay: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. மேலும் இப்படம் சம்பந்தமாக கடந்த வாரம் இசை வெளியீட்டு விழா நடந்தது. ஆனால் இது முடிந்த பிறகு பல சர்ச்சைகள் பூதாகரமாக கிளம்பி வந்து கொண்டே இருக்கிறது.

அதாவது ஆடியோ லாஞ்சில் ரஜினி பேசுவார் என்று ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்து இருந்தார்கள். அந்த வகையில் ரசிகர்கள் நினைத்ததை விட அவர் ரொம்பவே பேசினார். இவர் பேசியதை வைத்து விஜய்யை தான் தாக்கி பேசி இருக்கிறார் என்று பலரும் அவர்களுடைய கருத்துக்களை கோபமாக தெரிவித்து வருகிறார்கள்.

Also read: வேட்டையாடு விளையாடு பார்த்து இன்று ரீ-ரிலீஸ் ஆன 10 படங்கள்.. பாபாவில் விட்டதை தட்டி தூக்க திட்டமிட்ட ரஜினி

போதாக்குறைக்கு கலாநிதி மாறன் வேற, அவர் இஷ்டத்துக்கு பேசி இருக்கிறார். இவர் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மறைமுகமாக விஜய்யை ரொம்ப மோசமாக தாக்கி பேசி இருக்கிறார். அதாவது 73 வயதில் நீங்கள் நடிக்கும் பொழுது இந்த அளவிற்கு தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி உங்கள் பின்னாடி வந்தால் அப்பொழுது சொல்லுங்கள் சூப்பர் ஸ்டார் என்று.

அதுவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என்று பேசி இருக்கிறார். இவர் இப்படி பேசியது விஜய்க்கும் இவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சவுக்கடி மாதிரி இருந்து வருகிறது. அத்துடன் நம்மை வைத்து நிறைய படங்கள் எடுத்து லாபம் பார்த்துவிட்டு இப்படி பேசி இருக்கிறார்.

Also read: 72 வயதில் சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்?. ஏழு வருடத்தில் 70 படங்கள் நடித்த சாதனை

இனிமேல் எப்படி படம் என்னை வைத்து எடுப்பார் என்று பார்ப்போம் என விஜய் ஒரு முடிவுடன் இருக்கிறார். இனிமேல் கலாநிதி கூப்பிட்டாலும் சரி இல்லை என்றால் 500 கோடியை சம்பளமாக கொடுக்கிறேன் என கூப்பிட்டு வந்தாலும் அவருடைய தயாரிப்பில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என விஜய் முடிவு செய்திருக்கிறார்.

மேலும் விஜய் இருக்கும் கோபத்திற்கு சன் டிவிக்கு போட்டியாக ஒரு சேனலை தொடங்கி விடுவார் போல. அந்த அளவிற்கு வெறிகொண்டு கலாநிதி மாறன் மீது செம கடுப்பில் இருக்கிறார். ரஜினியை குஷிப்படுத்துவதற்காக தேவையில்லாமல் விஜய்யை சீண்டி பார்த்து விட்டார்.

Also read: சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் இளம் ஹீரோ.. விஜய், சிவகார்த்திகேயன் எல்லாம் பின்னாடி போங்கப்பா!

Trending News