ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜூன் விஜயுடன் இணைந்து நடித்த லியோ படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன், இவரது நடிப்பும் பெரியளவில் பேசப்பட்டது. இவர் நடிப்பில் தாமரைக் கண்ணு இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விருன்னு என்ற படம் ரிலீசானது.
தற்போது மங்காத்தா படத்துக்கு பின் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஹீரோவாக நடித்து அசத்தியவர் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் துணைக் கேரடர்களிலும், வில்லனாகவும், முக்கிய கேரக்டரிலும் நடித்து அசத்தி வருகிறார். அர்ஜுன் ஹீரோவாக நடிப்பதைவிட கேரக்டர் ரோல்களில் வயதுக்கு ஏற்ற ரோல்களில் நடிப்பதுதான் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
காமெடி நடிகர்களுடன் ஷூட்டிங்கில் நடிக்க முடியாது – அர்ஜூன் பகிர்ந்த தகவல்
சமீபத்தில் ஒரு ஊடகத்துக்குப் பேட்டியளித்த அவர், பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பற்றி மனம் திறந்து பேசினார். அதில், ”ஜெய்ஹிந்த் படத்தை நான் தான் இயக்கினேன். அப்படத்தில் நான் தான் காமெடி வசனங்களையும் எழுதினேன். இப்படத்தின் போது நடந்தவற்றை மறக்க முடியாது.
ஏனென்றால், இப்பட ஷூட்டிங்கின் போது, கவுண்டமணி சாருடன் நான் நானும் இருப்பேன். ஆனால் அவருடன் என்னால் நடிக்க முடியாது. என்னை அறியாமல் சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு டைமிங்கில் காமெடி பண்னுவார். அதனால் பிரேமில் நான் பின்னாடி திரும்பி சிரித்துவிடுவேன்.
என்னை நானே கண்ட்ரோல் செய்து கொள்வேன். அதேபோல் தான் கிரி பட ஷூட்டிங்கில் வடிவேலுவுடன் நடிக்கும் போது, என்னால் இருவருடனும் நடிக்க முடியாது. இருவரும் திறமையானவர்கள், அவர்கள் ஷூட்டிங்கில் டைமிங்கில் அடிக்கும் காமெடியில் சிரித்து விடுவேன்’ என்று வடிவேலு மற்றும் கவுண்டமணியை மனதாராப் பாராட்டியுள்ளார்.
பொதுவாகவே ஷூட்டிங்கில் கலகலவென இருக்கும் என்று கூறுவர். அதிலும், வடிவேலு, கவுண்டமணி காமெடி செய்யும் படங்கள் என்றால் சொல்லவா வேண்டும். அதிலும், தமிழில் எவர் கிரீன் காமெடி என்றால் அது ஜெய்ஹிந்த் படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி; அடுத்து, கிரி படத்தில் வடிவேலு, அர்ஜூன் காமெடி என்று ரசிகர்கள் அர்ஜூனின் பேட்டி குறித்து பேசி வருகின்றனர்.