வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாலிவுட் நடிகர் கூட நானா.? மனசாட்சி இல்லையா என குமரிய மாளவிகா மோகனன்

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இன்னிலையில் தமிழில் எதுவும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி உள்ளார். யுத்ரா என்னும் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் மாளவிகா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அந்தச் செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இது முற்றிலும் பொய்யான செய்தி. இதைப் பார்த்து பலரும் எனக்கு போன் செய்து தொல்லை செய்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

இது வதந்தியான செய்திதானே என பல நடிகைகளும் கடந்து போகும் நேரத்தில் இதற்கான நேரம் எடுத்த தனது ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மாளவிகா மோகனன் போட்ட இந்த பதிவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பதிவின் கீழே ரசிகர்கள் பலர் கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

அதாவது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே தற்போது சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் விரைவில் மாளவிகா மோகனும் சல்மான்கானுடன் நடிக்க வேண்டும் என அவரது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

malavika mohanan
malavika mohanan

Trending News