வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் தெரியாதுன்னு சொன்னது ஒரு குத்தமா.? கொலவெறியில் நெட்டிசன்கள் செய்த சம்பவம்

அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். துணிவு என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படம் கொடுத்த நிலையில் அவருடைய விடாமுயற்சி படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த சூழலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அஜித் என்று சொன்னால் இவர்தான் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் சமீபத்தில் திமுக அமைச்சர் துரைமுருகன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அஜித் படங்களை பார்த்ததுண்டா என்ற கேள்விக்கு, அஜித்னா யாரு என்று துரைமுருகன் கேட்டிருந்தார்.

Also Read: ஜெயிலரால் வேகம் எடுக்கும் ரஜினி, ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. சிக்கலில் மாட்ட போகும் விஜய்

இதுதான் தற்போது ட்விட்டரை அல்லோலப்படுத்தி கொண்டிருக்கிறது.# ஐயோ அம்மா கொல்றாங்க என்ற ஹேஷ் டேக்கை அஜித் ரசிகர்கள் அதிகம் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் துரைமுருகன் ஆகியோரை ட்ரோல் செய்யும் விதமாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதாவது பல வருடங்களுக்கு முன்பு கலைஞர் விழாவில் அஜித் கலந்து கொண்ட போது மேடையில் துணிச்சலாக பேசியிருந்தார். அதாவது அரசியல் பிரபலங்கள் சிலர் சினிமா நட்சத்திரங்களை வற்புறுத்தி விழாவுக்கு அழைக்கிறார்கள். எந்தக் கட்சி பிரபலங்கள் ஆட்சிக்கு வந்தாலும் சினிமா பிரபலங்களின் ஆதரவு இருக்கும்.

Also Read: ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

சினிமா பிரபலங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என அஜித் பேசிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி உள்ளார். மேலும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்பே இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோவை தான் அஜித் ரசிகர்கள் இப்போது அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் சிலர் பொதுக்கூட்டத்திற்கு வரவேண்டும் என்றால் மது, பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் வர வைக்கிறார்கள். ஆனால் அஜித் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்த போதும் அவருக்காக எதையும் செய்ய நாங்கள் இருக்கிறோம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சாதாரணமாக அஜித் தெரியாது என்று சொன்னதால் இவ்வளவு பெரிய சர்ச்சை தொடர்ந்து வெடித்து வருகிறது.

Also Read: ஒரு வழியாக மொத்த ஸ்கிரிப்ட்டை உறுதி செய்த அஜித்.. சொன்ன மாதிரி ரிலீஸ் தேதியை லாக் செய்த மகிழ் திருமேனி

Trending News