ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

முதல் முறையாக திருநங்கை இயக்கி, நடித்த படம்.. ஆச்சரியமூட்டும் நீல நிறச் சூரியன் உண்மை கதை

எல்லா துறைகளிலும் ஆண், பெண், திருநங்கைகளுக்கு சம அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பாக உள்ளது. எந்த வேறுபாடும் இல்லாத வகையில், அனைவரது திறமைகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் நீல நிறச் சூரியன். இத்திரைப்படத்தில், கீதா கைலாசம், கஜராஜ், மஹாந்த், கிட்டி, பிரசன்னா பாலச்சந்தர், கே.வி.என். மணிமேகலை உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்டிவ் பெஞ்சமின் இசையமைத்து, ஒளிப்பதிவு செய்துள்ளார், இப்படத்தை மாலா மணியன் தயாரித்துள்ளார்.

வித்தியாசமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புள்ள படங்களை என்றுமே கொண்டாட தயாராக உள்ளனர். அதேபோல் திருநங்கை சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன் படமும் உருவாகியுள்ளது. இப்படம் பல உலத் திரைபப்ட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ள நிலையில் இப்படத்தைத் தியேட்டரில் பார்த்து ரசிகர்களும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

சம்யுக்தா விஜயன் கூறியதாவது: ”ஒரு ஆண் பெண்ணாக மாறுவது பற்றி இச்சமூகம் அவர்களை எப்படி காண்கிறது; அவர்கள் எப்படி முக்கியமான சாதனைகளை நிகழ்த்துகின்றனர் என்பதைப் பற்றி நாடகமின்றிச் சொல்லும் படம் இது என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் கதையைப் பற்றி கூறியதாவது: ”தென்கொரிய நாட்டில் வேலை செய்தபோது, வெள்ளிக்கிழமை வரை ஆண் உடையில்தான் அலுவலகத்திற்குச் சென்றேன்.

அதன்பின், திங்கட்கிழமை பெண் உடையை அணிந்து சென்று எனது அடையாளம் இதுதான் என்று கூறினேன். அப்போது, அலுவலகத்தில் இருந்த எல்லோருமே என்னை அப்படியே அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனர். இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் சூழ்நிலை என்று யோசித்து பார்த்தேன். அதுவே இப்படத்திற்கான ஒன்லைனாக உருப்பெற்றது” என்றார்.

மேலும், ”எனக்கு டிரைக்சன், எழுத்து, நடிப்பு எதுவுமே தெரியாது. ஆனால் இது என்னால் முடியும் என்று நம்பினார்கள். அதன்படி இப்படத்தை எடுத்து முடித்தோம். இது ஒரு வித்தியாசமான என்டர்டெயின்மென்ட் படம்” என்று தெரிவித்துள்ளார். அதாவது, அரவிந்த், பானுவாக மாறும் உணர்ச்சிப் பூர்வமான கதை என்றாலும் இதை இக்காலத்திற்கு ஏற்ப கமர்சியலாகவும், அழுத்தமான படைப்பாக ரசிகர்களுக்கும், சமூகத்திற்கும் தரவிருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன்.

‘ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள் வரும் அப்படி சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும்’ என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இப்படம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி வரவேற்பை பெற்ற நிலையில், சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 2.37 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட டிராமா வகையைச் சேர்ந்த இப்படம் நாளை தியேட்டரிகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News