லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தோடு வளம் வரும் நயன்தாரா பொதுவாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூட பெரும்பாலும் போனது கிடையாது.
அவர் தயாரித்தால் மட்டும் தான் ப்ரோமோஷன்-களுக்கு செல்வார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது திருமண ஆவணப்படம் வெளியான நாள் முதல் லேடி சூப்பர்ஸ்டார் சர்ச்சை ராணியாக மாறியுள்ளார்.
தனுஷ் பற்றி இவர் அறிக்கை வெளியிட்டதை கூட யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அவரை தரக்குறைவாக பேசியது, நயன்தாரா ரசிகர்களால் கூட ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பது தான் உண்மை.
]காரணம் இன்று ஹாலிவுட் வரை தனுஷ் சென்றிருக்கிறார் என்றால், அது அவரது கடின உழைப்பு மட்டுமே. எந்த இடத்திலும் இன்னார் மகன், இன்னார் மருமகன் என்று அவர் கூறி வாய்ப்பு கேட்டதில்லை.
பட்டமும் வேண்டாம், எந்த பதவியும் வேண்டாம்..
இந்த நிலையில், தனுஷின் வளர்ச்சியை மிகவும் எளிதுபடுத்தி நயன்தாரா பேசியது தான் சர்ச்சைக்கு வித்திட்டது. இப்படி இருக்க, சமீபத்தில் நயன்தாரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியது மீண்டும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதில், “என்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். ஆனால் எனக்கே டைட்டில் கார்ட்-ல் இந்த பட்டத்தை பார்க்கும்போது.. ‘என்னடா இது.. அப்படி என்ன செய்துவிட்டோம்’ என்று தான் இருக்கும்.”
“இந்த பட்டத்தை ரசிகர்கள் எனக்கு கொடுத்தார்கள். நானாகவோ, அல்லது எனக்கு நெருக்கமானவர்களோ இந்த பட்டத்தை எனக்கு வைக்கவில்லை.
சொல்லப்போனால், இந்த பட்டம் பதவி எதுவும் எனக்கு வேண்டாம். உண்மையில், ஒவ்வொரு முறை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கும்போதும், எனக்கு பயமாக தான் இருக்கும்.”
“நான் எப்போதுமே, என்னை சிறந்த நடிகை என்று கூறியதே இல்லை. இருப்பினும் எனது ரசிகர்கள் எனது ஏற்ற இராக்கிங்கில் எல்லாம் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
அதனால், அவர்களை முட்டாளாக்கும் எண்ணத்தில் ஒருபோதும் நான் நடந்துகொண்டது இல்லை. மேலும் ஒரு பெண் வெற்றிகரமாக இருப்பது இங்கு பலருக்கு பிடிப்பதில்லை..
அதில் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் எதோ பிரச்சனை எல்லோருக்கும் உள்ளது என்று மட்டும் தெரிகிறது.” என்று கூறியுள்ளார்.