வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நான் என்றும் அஜித்தின் ரசிகன் தான்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூன்றெழுத்து நாயகன்

நடிகர் அஜித் சினிமா வாழ்க்கையில் பல தோல்விகளை கடந்து இன்று இந்திய சினிமாவிலேயே மாபெரும் நடிகராக உருவெடுத்துள்ளார். இவரது உழைப்பையும், விடாமுயற்சியையும் கண்டு ரசிகர்கள் மட்டும் வியந்தது கிடையாது, பல பிரபலங்களும் ஏதாவது மேடை கிடைக்கும் இடங்களிலெல்லாம், அஜித்தை பற்றி பேசும்போது அவரது வெற்றியை புகழ்ந்து தள்ளுவர்.

மேலும் பல நடிகர்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்று கூட சொல்லி மகிழ்வர். அப்படி பிரபல மூன்றெழுத்து நடிகர் பல காலமாக அஜித் ரசிகராக இருந்த நிலையில், தற்போது விஜய் ரசிகராக மாறியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் விஜய் நடித்திருந்தார்.

Also Read: வாரிசு துணிவுக்கிடையே 100 கோடி வசூல் வித்தியாசம்.. கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டிய ஆட்ட நாயகன்

படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் இப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது. இந்த பாடல் காட்சியில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சிம்பு இப்பாடல் காட்சியில் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார்.

நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகரகாவார், இந்நிலையில் அவர் எப்படி விஜய் பட பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்துக்கொடுத்தார் என்ற கேள்வி எழுந்தது. மேலும் விஜய் ரசிகராக முழுவதுமாக சிம்பு மாறிவிட்டார் என்ற செய்தியும் வைரலாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் சிம்பு இதுகுறித்து பேசியுள்ளார்.

Also Read: சிம்புவின் 50வது படத்தை இயக்கப் போகும் அதிர்ஷ்டசாலி.. மாஸ் காம்போவில் உருவாகும் படம்

2015 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு,ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த படம் தான் வாலு. இப்படம் வெளியாகி பெரும் தோல்வியுற்ற நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இந்நிலையில் அஜித்திடம் சென்று சிம்பு உதவிக்கேட்டுள்ளார். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தியிடம் தனக்கு பேச்சுவார்த்தை இல்லை என்றும் இதற்காக வந்து பேசினால் சரியாக இருக்காது என்று கூறி சிம்புவுக்கு உதவ மறுத்துள்ளார் அஜித்.

ஆனால் இந்த விஷசயத்தை கேள்விப்பட்ட நடிகர் விஜய் எஸ்.எஸ். சக்கரவர்த்தியிடம் தானாக முன்வந்து பணத்தை வழங்கி சிம்புவை அந்த இன்னல்களிலிருந்து மீட்டுக்கொடுத்தார். இதற்கு நன்றி கடனாக தான் சிம்பு வாரிசு படத்தின் தீ தளபதி பாடலில் சம்பளமே வாங்காமல் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் நான் எப்போதும் அஜித்தின் ரசிகன் தான். விஜய் அண்ணாவை தனக்கு பிடிக்கும் என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also Read: சிம்பு பிறந்த நாளுக்கு அஜித், விஜய் அப்டேட்.. இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெஷல் டே ஆக அமையும்.!

Trending News