திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வடிவேலை விட இவரைத்தான் ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை படாத பாடு படுத்திய நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-வடிவேலு காம்பினேஷனில் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் மிகப் பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் சந்திரமுகி. இப்படம் அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனையும் புரிந்து இருந்தது. இருப்பினும் ரஜினிக்கு வடிவேலுவை விட மற்றொரு காமெடி நடிகரை தான் ரொம்பவும் பிடிக்குமாம்.

இயல்பாகவே அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் அது அவருக்கு நெருக்கமானவர்கள் பலருக்கும் தெரியும் அதனாலேயே காமெடி நடிகர்களின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க சொல்வாராம். அந்த அளவிற்கு எந்த பாகு பாடும் பார்க்காத இவருக்கு ஜனகராஜை மிகவும் பிடிக்குமாம்.

Also Read:வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த படம் தான் பாட்ஷா, பாண்டியன்,ராஜாதி ராஜா மற்றும் படிக்காதவன். அதிலும் முக்கியமாக படிக்காதவன் படத்தில் தங்கச்சியை நாய் கடிச்சுருச்சுப்பா என்ற வரியை ஜனகராஜ் திரும்பத் திரும்ப கூறி ரஜினியை ஓடவிட்டு இருப்பார். அதை இப்போது பார்த்தாலும் அடக்க முடியாத சிரிப்பு வரும்.

அதேபோன்று ராஜாதி ராஜா படத்தில் ஜனகராஜ் ஸ்டுப்பிட் ஆஃப் தி நான்சென்ஸ் ஆப் தி இடியட் என்ற டயலாக்கை இங்கிலீஷில் பேசி ரஜினியை படாதபாடு படுத்தியிருப்பார். இப்படி இவர்கள் இருவரின் காம்பினேஷன் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read:வடிவேலுவை ஓரம் கட்ட வரும் காமெடி நடிகர்.. ரீ என்ட்ரியில் தரமான சம்பவம் இருக்கு

ஆனால் இப்போது அது போன்ற காம்பினேஷன் ரஜினிக்கு அமையாது வேதனையை அளிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க படங்களில் செந்திலை பார்த்தாலே சிரிப்பு வரும். அதுவும் இவர் குரலை கேட்டால் ரொம்பவே சிரிப்பு வரும் என்று ரஜினி அடிக்கடி சொல்வார். அந்த அளவுக்கு செந்திலின் காமெடிகள் இவருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.

அவ்வாறு வீரா, முத்து, அருணாச்சலம், படையப்பா ஆகிய படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கலக்கி இருப்பார்கள். அதைத் தொடர்ந்து ரஜினி பலருடன் இணைந்து காமெடி பண்ணியிருந்தாலும் இவர்கள் அளவுக்கு யாரும் கிடையாது. அதனாலேயே அவருக்கு வடிவேலுவை காட்டிலும் இந்த இரு ஜாம்பவான்களை தான் பிடிக்குமாம்.

Also Read:ஜனகராஜின் ஒரு கண் சிறியதாக இருக்க இதான் காரணமாம்.. அடக்கொடுமையே!

Trending News