புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நான் தவறு செய்துவிட்டேன்.. கணவர் செய்த கேவலமான செயலால் புலம்பும் தளபதி பட நடிகை

ஷில்பா ஷெட்டி ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் என நடித்துள்ளார். 44 வயதிலும் மாடலிங், நடிப்பு, டிவி நிகழ்ச்சிகள் என பங்கேற்று வருகிறார். இவற்றுடன் இலாப நோக்கமற்ற (NGO ) நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் படங்களில் நடித்து சம்பாரிக்கும் பணத்தை விட விளம்பரங்களில்.

ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆபாச படத் தயாரிப்பில் ஷில்பாவுக்கு தொடர்பு உண்டு என்று பேச்சு கிளம்பியது. இதுபற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடர்ந்தார் ஷில்பா ஷெட்டி. ராஜ் குந்த்ரா கைதான பிறகு அவரை தான் கண்டுகொள்ளவில்லை என்பதில் உண்மை இல்லை என்றார்.

இந்நிலையில் தான் தவறு செய்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் ஷில்பா. தவறுகள் பற்றி எழுதியிருக்கும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். சில தவறுகள் செய்யாமல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. அது அபாயகரமான தவறுகள் அல்லது பிறரை காயப்படுத்தும் தவறுகளாக இருக்காது என்று நம்புவோம். ஆனால் தவறுகள் இருக்கும்.

நான் தவறுகள் செய்யப் போகிறேன், என்னை மன்னித்து, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், நான் தவறு செய்துவிட்டேன் ஆனால் பரவாயில்லை என்கிற ஒரு ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார் ஷில்பா.

shilpa-shetty
shilpa-shetty

முன்னதாக போலீசார் தங்கள் வீட்டில் பரிசோதனை செய்தபோது, நம்மிடம் எல்லாம் இருந்தும் ஏன் இப்படி செய்தீர்கள், குடும்ப மானம் போச்சு என்று ராஜ் குந்த்ராவை திட்டினாராம் ஷில்பா.

Trending News