வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய் ஸ்டைலில் ஒரு படம் வேண்டும்.. அட்லீயிடம் கோரிக்கை வைத்த முன்னணி நடிகர்

பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து விஜயகாந்தின் பேரரசு பட ஸ்டைலில் ஒரு படம் உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளன.

அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குவார் என தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். காரணம் கடந்த சில வருடங்களாக விஜய் ஒரு படம் விட்டு ஒரு படம் அட்லீயுடன் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஷாருக்கான் படத்திற்கு முன்னரே அட்லீக்கு பிரபல முன்னணி நடிகர் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்த செய்தி வெளியில் வந்துள்ளது.

atlee-shahrukhkhan-cinemapettai
atlee-shahrukhkhan-cinemapettai

காப்பி இயக்குனர் என அனைவரும் கிண்டல் செய்தாலும் அட்லீக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மாஸ் வெற்றிப் படங்களை பார்த்த தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அட்லீயிடம் தனக்காக ஒரு கதை எழுதும் படி கேட்டுள்ளார். மேலும் அந்த படம் விஜய் ஸ்டைலில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாராம்.

அதன்படி ஏற்கனவே அட்லீ எழுதி வைத்துவிட்டார். ஆனால் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகள் எதுவும் நடத்தப்படாத சூழ்நிலை இருந்ததால் திடீரென ஷாருக்கான் வாய்ப்பு கிடைத்து சென்றுவிட்டார் அட்லீ. அதேபோல் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ராஜமௌலி படமும் இன்னும் முடிந்தபாடில்லை.

atlee-Jr-NTR-cinemapettai
atlee-Jr-NTR-cinemapettai

இந்நிலையில் ஷாருக்கான் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில வருடங்களுக்கு விஜய், அட்லீ கூட்டணியில் படம் உருவாவது கேள்விகுறிதான் என்கிறது சினிமா வட்டாரம்.

Trending News