வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நான் வச்ச குறி எப்போதுமே தப்பாது.. அர்ச்சனா விற்கு அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணும் காமெடி பீஸ்

Tamil Bigg Boss 7:  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 7, 59வது எபிசோடை தாண்டி இருக்கிறது. இதில் 14 போட்டியாளர்கள் தற்போது விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் இப்பொழுது வரை மக்களிடத்தில் ஓரளவுக்கு டாப் 5 வில் இடம் பிடித்திருப்பது. விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், மாயா மற்றும் விஷ்ணு. ஆனால் இதில் அர்ச்சனா மற்றும் விசித்ராவிற்கு மக்கள் அதிகமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்ற கடுப்பு உள்ளே இருக்கும் போட்டியாளருக்கு இருக்கிறது.

முக்கியமாக மாயா, பூர்ணிமா மற்றும் விஷ்ணுவிற்கு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் விஷ்ணுவிற்கு, அர்ச்சனா என்றாலே பிடிக்காமல் போய்விட்டது. அதற்கு காரணம் அர்ச்சனா மீது ஏற்பட்ட பொறாமை. அதனால் வயிற்று எரிச்சல் ஒவ்வொரு விஷயத்துக்கும் டார்ச்சர் செய்து தொந்தரவு கொடுக்கிறார். சாதாரண விஷயத்துக்கு எல்லாம் அர்ச்சனாவை டார்கெட் பண்ணுகிறார்.

அந்த வகையில் நேற்று ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு யாரெல்லாம் போக வேண்டும் என்று அறிவிப்பு வந்ததும், விஷ்ணு உடனே கூல் சுரேஷ் மற்றும் விஜய்யிடம் உங்களுக்கு தூங்குவதற்கு தேவையான பெட்டை முதலில் பெட்ஷீட் போட்டு பிடித்துக் கொள்ளுங்கள். அதுபோக மேலே இருக்கும் இரண்டு பெட்டுகளில் நான் மற்றும் பூர்ணிமாவும் தூங்கிக் கொள்கிறோம் என்று சொல்கிறார்.

Also read: பூர்ணிமாவை பலி கிடாவாக ஆக்கிய மாயா.. நம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமான சூனியக்காரி

அதற்கு காரணம் அர்ச்சனா விற்கு கீழே படுத்தால் தூக்கம் வராது என்று தெரிந்தும், தேவையில்லாமல் அவரை டார்கெட் செய்தார். இருந்தாலும் அர்ச்சனா இதை பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார். அத்துடன் எங்கேயாவது ஒரு இடம் கிடைத்தால் அந்த இடத்தில் அர்ச்சனாவை பற்றி தவறாக பேசி மக்களிடத்தில் கெட்ட பெயரை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் விஷ்ணு ஒவ்வொரு வேலையும் பார்த்து வருகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி இன்று இவர்கள் இருவருக்கும் தான் ஏகப்பட்ட வாக்குவாதங்கள் ஆகிக்கொண்டிருக்கிறது. இதில் அர்ச்சனா பேசும் கரெக்டான பாயிண்ட்டுக்கு பதில் அளிக்க முடியாததால் சும்மா வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டே இருக்கிறார். அத்துடன் அர்ச்சனாவின் வீக்னஸ் பாயிண்டை பயன்படுத்தி அவரை ஆப் பண்ணும் விதமாக நீ ஒரு அழுமூஞ்சி, எதற்கெடுத்தாலும் அழ தான் தெரியும் என்று அர்ச்சனாவின் கோபத்தை தூண்டும் அளவிற்கு பேசுகிறார்.

அதற்கு அர்ச்சனாவும் அப்படியா இனிமேல் நான் எதற்காகவும் அழ மாட்டேன் என்று சவால் விடுகிறார். இதற்கு இடையில் விஷ்ணுவின் பிளான் என்னவென்றால் இவர் ஒரு ஃபார்முலாவை யூஸ் பண்ணி ஒரு போட்டியாளரை குறி வைக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரியும் அந்த வார கடைசியில் அந்த போட்டியாளர்கள் வெளியே போய் விடுகிறார்கள். அப்படி தான் கடைசியாக அக்ஷயா வெளியே போனார். அதனால் அதே பார்முலாவை அர்ச்சனாவிடமும் யூஸ் பண்ணி விட்டால் வெளியே போய்விடுவார் என்று பிளான் பண்ணுகிறார். ஆனால் இவரது பிளான் புஸ்வானம் மாதிரி புஸ்துனு தான் போகப் போகுது.

Also read: நீ பண்ற ஜல்ஸா வேலைக்கு கேப்டன் பதவி ஒரு கேடு.. நிக்சனுக்கு பிக்பாஸ் வச்ச ஆப்பு

Trending News