சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி நாடகம் மூலம் நடிகராக அறியப்பட்டவர் போஸ் வெங்கட். அதன்பின், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
பாரதிராஜாவின் ஈர நிலம், சிவாஜி, மருதமலை, தாம் தூம், கோ, தீரன் அதிகாரம் ஒன்று, 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும், சினிமாவில் நடிகராக வெற்றி பெற்ற இவர், 2020 ல் கன்னிமாடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதில், ஸ்ரீராம் கார்த்திக், சாயா தேவி, ஆடுகளம் முருகதாஸ், மைம் கோபி ஆகியோர் நடித்தனர். ஹரி பாய் இசையமைத்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.
இதையடுத்து விமல், சாயா தேவி கண்ணன் நடிப்பில், சித்து குமார் இசையில் வெளியான படம் சார். இப்படம் அக்டோபர் 18 ல் ரிலீசானது.
சார் படத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்ன சொன்னார்? – போஸ் வெங்கட் தகவல்
இதுகுறித்து போஸ் வெங்கட் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில், ’’இரவு 11.45 க்கு வெற்றிமாறன் சாரிடம் நேராக சென்றேன். போன பிறகு என்ன விஷயம் என்று கேட்டார் என்னிடம். நான் கன்னிமாடம் படம் இயக்கியுள்ளேன். அது வெளியாகி கவனிக்கப்படவில்லை.
இந்தப் படம் வெளியாகி அதேமாதிரி ஆகியிருமோன்னு பயமாக இருக்கு சார் என்றேன். உங்க பட்த்தை அனுப்புங்க. இது என் ஜெர்னர் படமா இருந்தா நான் ரிலீஸ் பண்றேன் என்றார்.
அவருக்கு எதிரில் அலுவலகத்தில் உட்கார்ந்தார். நானும் அமர்ந்தேன். நான் கற்பனையாக ஒன்று நினைத்தேன். அதாவது, உங்கள பத்தி நிறைய பேர் சொல்றாங்க. பேசாம நடிச்சிட்டு போங்களே, நானும் உங்கள யூஸ் பண்னிக்கிறேன் என சொல்வார் என்று நினைத்தேன்.
ஆனால், படம் ரொம்ப நல்லா இருந்துச்சு என்று கூறினார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது ’’என்று தெரிவித்தார்.