வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நான் உன்ன தங்கச்சினு நினைச்சேன் அவமானப்படுத்திட்ட.. ஜனனியால் ரணகளமான பிக்பாஸ் வீடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. கமல் சொல்வது போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக் பாஸ் வீட்டில் புதிதாக பல போட்டியாளர்கள் இடையே சண்டை நிலவி வருகிறது.

நேற்று தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இடையே டாஸ்கின் போது மிகப்பெரிய சண்டை வெடித்தது. இதைத்தொடர்ந்து மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இவ்வாறு எதிர்பார்க்காத இரண்டு அணிகளிடம் சண்டை நிலவி வருகிறது.

Also Read : விதிகளை மீறியதால் எலிமினேட் செய்யப்பட்ட ஷெரினா.. 28 நாட்களுக்கு பிக் பாஸ் கொட்டி கொடுத்த சம்பளம்

முதல் ப்ரோமோ வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது. அப்போது ஏடிகே என்று ஜனனி கூறியிருந்தார். இதைக் கேட்டு ஏடிகே கொந்தளித்துள்ளர்.

அதனால் தான் எல்லோரிடமும் நான் எலுமினேட் ஆயிடுவேன் என்று சொல்லிக் கொண்ட திரிகிறாயா என ஏடிகே ஜனனியை கேட்டுள்ளார். இத்தனை நாள் ஒரு தங்கையாக தான் உன்னிடம் நிறைய ஆலோசனை கூறி உள்ளேன். அதை நீ கேவலப்படுத்தி விட்டாய் என ஏடிகே ஆத்திரமடைந்தார்.

Also Read : இந்த வாரம் கமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் போட்டியாளர்.. மயிரிழையில் உயிர் தப்பிய மகேஸ்வரி

பிக் பாஸ் வீட்டிலேயே தங்கச்சி என்று அவள் மீது அதிக பாசத்தை வைத்ததாக கண்ணீர் மல்க ஏடிகே பேசியுள்ளது அனைவரையும் உருக்கச் செய்துள்ளது. ஆனால் ஜனனி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அப்படியே அமர்ந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் யாரும் உறவு கொண்டாட கூடாது என்பதே நிதர்சனமான உண்மை.

ஏனென்றால் அங்கு நடப்பது எல்லாமே ஒரு மாயை போல் உள்ளது. போர்க்களமாக சண்டை பிடித்த பின் ஐந்து நிமிடங்களிலேயே எதுவும் நடக்காதது போல் சிரித்து பேசி பழகுகிறார்கள். இதில் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என ரசிகர்கள் தற்போது குழப்பமடைந்து உள்ளனர்.

Also Read : அவனா டா நீ! பலான கேசில் மாட்டிய விக்ரமன்.. நம்பவே முடியல ஊருக்கு தான் உபதேசமா?

Trending News