திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கேப்டன் மில்லருக்கு ரெண்டு கதை சொல்லி இருக்கேன்.. விளம்பரம் தேடும் ஹிப்ஹாப் ஆதி இயக்குனர்

கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ், தற்போது வாத்தி படத்திற்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1930-40 காலகட்டத்தில் நடக்கும் சம்பவமாக கேப்டன் மில்லர் படம் உருவாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தனுஷ் தன்னுடைய படத்தில்தான் நடிக்கப் போகிறார் என ஹிப்ஹாப் ஆதி பட இயக்குனர் ட்விட்டரில் பெருமை பீத்தி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.  ஆனால் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் நடிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக தனுஷின் 50வது படமான ராயன்  என்ற படத்தை அவரே இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

Also Read: செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய அனுஷ்கா.. தேவசேனாவுடன் தனுஷ் செய்த தரமான சம்பவம்

அதுமட்டுமல்ல செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்களும் அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. இந்த சூழலில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த வீரன் என்ற திரைப்படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதால் படக்குழு தற்போது புரமோஷன் வேலைகளை படுஜோராக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் புதுவிதமாக படத்திற்கு ப்ரமோஷன் தேடப் பார்க்கிறார்.

அதாவது தனுஷிடன் இரண்டு கதை சொல்லி இருக்கிறேன். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு முக்கிய முடிவு வெளியாகும் என்று ட்வீட் செய்து பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் வெளியான மரகத நாணயம் படம் தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அடுத்த பட வாய்ப்பு அவருக்கு கொடுத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

Also Read: நீண்ட தாடி, முடியுடன் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தனுஷ்.. ஏர்போர்ட்டில் சும்மா கெத்தாக வந்த நியூ லுக்

அது மட்டுமல்ல தனுசுக்கு நிச்சயம் சரவணனின் கதை பிடிக்கும் அளவுக்கு தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளை செய்து கொண்டிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கைந்து படங்கள் லைன் அப்-பில் உள்ளது. இத்தனை படங்கள் தனுசுக்காக வரிசை கட்டி காத்திருக்கிற போது, இவர் என்ன புதுசா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாரே! என்று நெட்டிசன்கள்  ஏஆர்கே சரவணன் பதிவிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவிற்கு தாறுமாறாக கமெண்ட் செய்த வருகின்றனர்.

மேலும் தன்னுடைய படம் வீரன் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அதற்கான ப்ரொமோஷன் ஆகவேதான் இதை சொல்லி இருக்கிறார். ஏனென்றால் தனுஷ் அடுத்த படத்தில் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இணைகிறார் என தெரிந்தால், ரசிகர்கள் வீரன் படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்க நினைப்பார்கள் என்ற ஒரு நற்பாசையில் தான் இப்படி ஒரு  வேலையை செய்திருக்கிறார். ஆனால் இது அப்பட்டமாகவே தெரிகிறது.

Also Read: 2 முறை வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட தனுஷ்.. ஒரே படத்தால் இயக்குனரின் சோலியை முடித்த ஜெயம் ரவி

Trending News