மண்ணை கவ்விய நானே வருவேன்.. ஆனாலும் தனுஷ் காட்டும் பேராசை, தயாரிப்பாளர் ஓட்டம்

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அவர் நடிப்பில் உருவான நானே வருவேன் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் அந்த திரைப்படத்திற்கு போதுமான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் அந்த திரைப்படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை. தனுஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும் படத்தை வெளியிட்ட நேரம் தான் தவறு என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக தனுஷின் நானே வருவேன் களமிறங்கியது.

Also read : பாலிவுட்டே பொறாமைப்படும் 2 தமிழ் நடிகர்கள்.. தனுஷ் மீது பயங்கர கிரஸ் என கூறிய சர்ச்சை நடிகை

ஆனால் ரசிகர்களின் ஆதரவு பொன்னியின் செல்வனுக்கு தான் கிடைத்தது. இப்போது வரை அந்த திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தோல்வியை பற்றி எல்லாம் தனுஷ் கவலைப்படவில்லை. அடுத்ததாக தன்னுடைய பட வேலைகளில் அவர் மும்முரமாக இறங்கி விட்டார்.

பிரம்மாண்ட தயாரிப்பாளர் தாணு தான் நானே வருவேன் பட தோல்வியால் நொந்து போய் இருக்கிறாராம். மீண்டும் அவர் தனுஷை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருந்த முடிவை கூட அவர் மாற்றிக் கொண்டாராம். இது ஒரு புறம் இருக்க தனுஷின் கறார் பேச்சு தான் தற்போது தயாரிப்பாளர்களை பதற வைத்துள்ளது.

Also read : தனுஷ் படக் காட்சியை சுட்ட கன்னட திரைப்படம்.. 150 கோடி வசூலுக்கு இதுதான் காரணம்..

ஏனென்றால் இதுவரை 30 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தனுஷ் இப்போது நான்கு விரல்களை காட்டி 40 கோடி வேண்டும் என்று கேட்கிறாராம். இத்தனைக்கும் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் திருச்சிற்றம்பலம் படம் தான் லாபகரமாக ஓடியது. அதிலும் நானே வருவேன் திரைப்படத்தால் விழுந்த அடியில் இருந்தே இன்னும் தயாரிப்பாளர் மீளவில்லை.

அப்படி இருக்கும்போது நியாயமே இல்லாமல் தனுஷ் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஆனாலும் தனுஷ் அந்த சம்பளத்திலிருந்து ஒரு ரூபாய் கூட குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். இதுதான் தற்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தியாக இருக்கிறது.

Also read : 15 படங்கள் நடித்தும் பிரயோஜனம் இல்ல.. கிடைத்த வாய்ப்பை தட்டி பறித்த தனுஷ்