சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இளையராஜா இசை அமைத்தல் மட்டுமே படத்தை இயக்குவேன்.. கங்கணம் கட்டிக்கொண்டு 10 படத்திற்கு காரியத்தை சாதித்த ஒரே இயக்குனர்

Music Director Illayaraja: சினிமாவைப் பொறுத்தவரை படங்கள் மக்களிடத்தில் ரீச் ஆக வேண்டுமென்றால் முதலில் பாடல்களை வைத்து அவர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் வரக்கூடிய அனைத்து படங்களிலும் ஏ ஆர் ரகுமான், அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜா வைத்து இசையமைத்து பட்டி தொட்டி எல்லாம் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

அப்படி இந்த காலத்தில் பல இசையமைப்பாளர்கள் வந்து விட்டார்கள். ஆனால் 80, 90களில் படங்கள் வெற்றியடைய வேண்டும் என்றால் அதற்கு இளையராஜா இசையமைத்தால் மட்டும் தான் நடக்கும் என்று வழக்கமாகவே இருந்தது. அதனால் எந்த ஒரு படங்கள் எடுக்க வேண்டும் என்றாலும் முதலில் இளையராஜாவிடம் கால் சீட் கேட்ட பிறகு தான் படத்தையே அதற்கேற்ற மாதிரி எடுக்க ஆரம்பிப்பார்கள்.

Also read: இளையராஜாவிடம் காலில் விழுந்து கெஞ்சியும் இறங்காத மனசு.. பிடிவாதத்தால் பலிக்கடாக மாட்டிய நடிகர்

அதிலும் சில இயக்குனர்கள் இளையராஜா இசை அமைக்கவில்லை என்றால் நான் படமே எடுக்க மாட்டேன் என்று தீர்மானமாக இருந்திருக்கிறார்கள். அப்படித்தான் பிரபல இயக்குனர் ஒருவர் தமிழில் 10 படங்களுக்கும் மேல் எடுத்திருக்கிறார். இதில் என்ன ஒரு மிக முக்கியமான விஷயம் என்றால் இந்த பத்து படங்களுக்குமே இளையராஜா இசை அமைத்தால் மட்டும் தான் நான் எடுப்பேன் என்று சொல்லி ஒவ்வொரு படத்தையும் எடுத்து சாதித்துக் காட்டி இருக்கிறார்.

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசிலின் தந்தை தான். இவருடைய தந்தை பாசில் என்பவர் தமிழில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்மகுட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை போன்ற பல படங்களை வெற்றிகரமாக கொடுத்திருக்கிறார்.

Also read: ஏஆர் ரகுமானை யூஸ் பண்ணிய இளையராஜா.. காலம் கடந்தும் தெரியாமல், கிடைக்காத அங்கீகாரம்

எடுத்த எல்லா படங்களுக்கும் இளையராஜா தான் மியூசிக் டைரக்டர். அதே மாதிரி இவர் எடுத்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக ஆகி இருக்கிறது. இப்படி இவரை போல் இளையராஜா தான் எங்களுக்கு வேணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்த இயக்குனர்கள் பல பேர்.

அதில் இயக்குனர் பாசில் ரொம்பவே லக் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர் ஆசைப்பட்ட மாதிரி இளையராஜாவே அனைத்து படங்களுக்கும் இசையமைத்து இவரை ஒரு சிறந்த இயக்குனராகவும் மக்களுக்கு அடையாளப்படுத்திக் கொடுத்திருக்கிறார். இசைஞானி என்றாலே அது எப்பொழுதுமே ஸ்பெஷல் தான், இயக்குனர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

Also read: பட்ஜெட் இல்ல, சம்பளம் வாங்காமல் இசையமைத்த இளையராஜா.. அல்டிமேட் ஹிட் அடித்த பாடல்கள்

Trending News