வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்படி மட்டும் படுக்கவே மாட்டேன்.. கனெக்ட் படத்தை விட நேரில் பயமுறுத்தும் நயன்தாரா

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கி கோலிவுட்டிலும் ஹாலிவுட் தரத்தில் ஹாரர் படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்த இயக்குநர் அஸ்வின் சரவணன் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நேற்று ரிலீசான கனெக்ட் திரைப்படத்தில் உச்சகட்ட பயத்தை காட்டியிருக்கிறார்.

இதில் கொரோனா காலகட்டத்தில் தனது மகளுக்கு பிடித்த பேயை நயன்தாரா எப்படி ஓட்டுகிறார் என்பதை திகில் கலந்து பயமுறுத்தி இருக்கிறார். இப்படி கனெக்ட் படத்தில் பேய்களை மிரட்டிய நயன்தாரா படத்தில் மட்டுமல்ல சமீபத்தில் அளித்த பேட்டியில் நிஜத்திலும் ரசிகர்களை அலற விட்டிருக்கிறார்.

Also Read: பகிரங்கமாக போட்டுக் கொடுத்த நயன்தாரா.. கனெக்ட் தோல்வியால் புத்தாண்டை இப்பவே கொண்டாடும் நடிகை

முதலில் பேய் என்றால் பயமே இல்லை என சொன்ன நயன்தாரா, அதன் பிறகு இரவில் லைட் இல்லாமல் தூங்க மாட்டேன் எனக் கூறி அவருக்கு இருக்கும் பேய் பயத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி எப்போதுமே விட்டத்தை பார்த்து படுக்கும் பழக்கமே கிடையாது.

ஏனென்றால் அப்படி படுத்தால் பேய்களுக்கு சாதகமாகிவிடும். அவர்கள் நேரடியாக தாக்குவது மட்டுமல்லாமல் அதுவே அவர்களுக்கு சாதகமாகி நம்மளை பயன்படுத்தி கொள்வார்கள் என்று இரட்டை அர்த்தத்துடன் பேசி கேட்போரை அதிர்ச்சி அடைய வைத்தார்.

Also Read: போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் நயன்தாரா.. கனெக்ட் படத்தின் முதல் நாள் வசூல்

ஆகையால் பெரும்பாலும் நயன்தாரா ஒரு சைடு சாய்ந்த படி தான் படுப்பாராம். இதற்கெல்லாம் காரணம் பேய் பயம் தான் என்றும் உடைத்துக் கூறியிருக்கிறார். இப்படி கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுகாக அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கண்டபடி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

இதனால் படம் ப்ரொமோட் ஆகிறதோ இல்லையோ இணையத்தில் எங்கு பார்த்தாலும் நயன்தாரா அளித்த பேட்டியை குறித்த பேச்சாக தான் இருக்கிறது. இருப்பினும் ரசிகர்களிடம் சரியாக கனெக்ட் ஆகாத கனெக்ட் திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே மந்தமான கலெக்சனை பெற்று வருகிறது.

Also Read: காசு வாங்கிக்கொண்டு நயன்தாராவுக்கு கூஜா தூக்கும் பிரபலம்.. ரிவ்யூ பார்த்து கடுப்பில் காரி துப்பிய நெட்டிசன்ஸ்

Trending News