வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இனிமேல் உங்கள பத்தி பேசவே மாட்டேன்.. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட அனகோண்டா ஸ்ரீரெட்டி

ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தனது அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். தன்னுடன் நடித்த நடிகர்கள் மீது அந்தரங்கப் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தனக்குப் பட வாய்புகள் வழங்குவதாகக் கூறிக் கொண்டு தவறாக நடந்து கொண்ட வாய்ப்புகள் எதுவும் வழங்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இத்தொடர்ந்து, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முன்பு குறைந்த ஆடைகளுடன் போராட்டம் நடத்தினர்.

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி ஆகியோர் மீது புகார் கூறியதும் கோலிவுட்டில் பேசுபொருளானது.
சினிமாத்துறையினர் மட்டுமன்றி, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரபலத்தின் மீதும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இவர் அடுக்கடுக்காக இப்படி குற்றச்சாட்டு கூறிய நிலையில் தெலுங்கு சினிமாத்துறையினர் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை?

சினிமாவில் இருந்து ஓரங்கப்பட்ட நிலையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்து, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிப்பாக தற்போதைய முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, துணைமுதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடுமையான விமர்சித்திருந்தார்.

எனவே ஸ்ரீரெட்டி மீது அக்கட்சியைச் சேர்ந்த பலரும் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் நடவடிகை எதுவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

சமீபத்தில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு முதல்வராகப் பதவியேற்றார். பவன் கல்யாண் துணைமுதல்வராகப் பதவியேற்றனர். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப் படையில் தற்போதைய ஆளுங்கட்சி உத்தரவிட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி

அதனால் ஸ்ரீரெட்டி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கால்யாணிடன் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செய்த விசயத்தால் என் குடும்பத்தினரால் வெளியே போக முடியவில்லை. என்னால் வீட்டில் உள்ள பெண்ணுக்குத் திருமணம் ஆகவில்லை என என்னைத் திட்டுகிறார்கள் பெற்றோர். இனி உங்களைப் பற்றி அவதூறு பேசமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.


Trending News