தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு நடிகரின் மீது செம கோபத்தில் இருப்பதாகவும் இனிமேல் அந்த நடிகரின் படத்தில் எக்காரணத்தைக் கொண்டு நடிக்க மாட்டேன் எனவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த பிறகுதான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் நடித்த அனைத்து படங்களுமே முன்னணி நடிகர்களுடன் தான்.
இடையில் காதல் தோல்வியால் சினிமாவை விட்டு விலகியிருந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டாராம். அந்தவகையில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
தற்போது தமிழில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் லாபம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கொரானா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே இருந்ததை பார்த்த ஸ்ருதிஹாசன் உடனடியாக படபிடிப்பை விட்டு வெளியேறிவிட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
அதை ஸ்ருதிகாசன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஏன் அப்படி சென்றேன் என்ற காரணத்தையும் தெரிவித்துவிட்டார். ஆனால் தற்போது ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்து விட்டாராம்.
மேலும் படத்தின் இயக்குனரான எஸ் பி ஜனநாதன் சென்னையில் செட் போட்டு படத்தை எடுக்கலாம் எனவும் தற்போது கொரானா பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு இல்லை எனவும் சுதிகாசன் இடம் ஒரு நாள் கால்சீட் கேட்டு கெஞ்சி கொண்டிருக்கிறாராம். இருந்தாலும் அம்மணி இறங்கி வந்த பாடில்லை.