ரிவெஞ் எடுத்தே ஆவேன்.. அஜித்தை தோற்கடிக்க விக்னேஷ் சிவன் போடும் கூட்டணி

அஜித்தின் 62-வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் வெளியானது. அவருக்கு பதில் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏகே 62 படத்தின் பட வாய்ப்பு கை நழுவியது விக்னேஷ் சிவனுக்கு பெரும் மன வருத்தத்தை அளித்தது. இதனால் பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். விக்னேஷ் சிவன், அஜித்தால் அவமானப்பட்டதை நினைத்து இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

Also Read: மூன்று பேரிடம் போன ஏகே 62 வின் கதை.. அஜித்தை பழிவாங்க 2 பேருக்கு வலை விரிக்கும் விக்னேஷ் சிவன்

இதனால் அஜித் படம் வரும்போது எப்படியாவது அந்த படத்தை தோற்கடிக்க வேண்டும். அஜித்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சூப்பர் ஹிட் நடிகருடன் கை கோர்த்து இருக்கிறார். மேலும் அஜித் செய்த காரியத்திற்கு ரிவெஞ் எடுத்தே ஆகுவேன் என, தற்போது இளம் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இது அஜித்திற்காகவே உருவாக்கப்பட்ட கூட்டணியாக கூறப்படுகிறது. அஜித் படம் வெளிவரும் அதே நாளில் எப்படியாவது இந்த படத்தையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விக்னேஷ் சிவன் இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

Also Read: பறிப்போகும் மக்கள் செல்வன் பட்டம்.. மிமிக்ரி ஆர்டிஸ்ட்க்கு வாய்ப்புக்கொடுத்த பாவத்திற்கு அனுபவிக்கும் விஜய் சேதுபதி

ஏற்கனவே குறைந்த பட்ஜெட்டில் பிரதீப் ரங்கநாதன் நடித்து சூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால் அவரை வைத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விக்னேஷ் சிவன் இருக்கிறார்.

இதை அவர் தனது மானப் பிரச்சினையாகவும் பார்க்கிறார். ஏனென்றால் ஏகே 62 படம் கைநழுவிய பிறகு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட கேலி கிண்டல்கள் எழுந்ததால், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து தரமான படத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறார்.

Also Read: 5 வருஷமா ஒரு ஹிட் படம் கொடுக்க முடியல.. இதுல விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொன்ன டஃப் நடிகர்