வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பண்ணை வீடு, உல்லாச வாழ்க்கை.. 35 வருட சினிமா வாழ்க்கையில் வடிவேலு சம்பாதித்த சொத்து மதிப்பு

Actor Vadivelu Net Worth: நடிகர் ராஜ்கிரனின் படங்களில் ஒரு சின்ன கேரக்டரில் தன் முகத்தை காட்டி விட்டு சென்ற வடிவேலு பின்னாளில் வைகை புயல்
வடிவேலுவாக தன்னுடைய அவதாரத்தை காட்டினார். இவருடைய நகைச்சுவை காட்சிகளாக இருக்கட்டும், அதில் அவர் உபயோகிக்கும் வார்த்தைகளாக இருக்கட்டும் அத்தனையுமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது தான் வடிவேலு ரொம்ப சீக்கிரமாக தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலமானதற்கான முக்கிய காரணம்.

பல முன்னணி நடிகர்களும் இவருடைய கால் சீட்டுக்காக காத்திருக்கும் அளவிற்கு வடிவேலுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. பாபா பட தோல்விக்கு பிறகு சந்திரமுகி படத்தை ஆரம்பிக்கும் போது ரஜினி வடிவேலு தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என ரொம்பவும் உறுதியாக இருந்ததாக சந்திரமுகி வெற்றி விழா மேடையில் அவரே சொல்லி இருக்கிறார்.

வடிவேலு சம்பாதித்த சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கும் மேலாக வடிவேலு ஆக்டிவாக இல்லை என்றாலும் அதற்கு முன்பாகவே தனக்கு தேவையான சொத்துக்களை தாராளமாக சேர்த்து விட்டார் வடிவேலு. வடிவேலுவின் சொத்து மதிப்பு மட்டும் 120 கோடி தாண்டும் என சொல்லப்படுகிறது சென்னை மற்றும் அவருடைய சொந்த ஊரான மதுரையில் அவருக்கு சொந்தமான நிறைய இடங்களும் இருக்கின்றன.

Also Read:மனைவி சங்கீதா பெயரில் விஜய் ஆரம்பித்த கல்யாண மண்டபம்.. ஒரு நாள் வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

வடிவேலு இன்றைய தேதிப்படி ஒரு படத்திற்கு நான்கு கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு சராசரியான கணிப்பு படி சொல்ல வேண்டுமென்றால் அவருடைய மாத வருமானம் ஒரு கோடி, ஆண்டு வருமானத்தை கணக்கிட்டால் கிட்டத்தட்ட 17 கோடியாக இருக்கிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் நாலு கோடியிலிருந்து அவருடைய சம்பளம் இன்னும் உயர அதிக வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வடிவேலுவுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இன்றைய தேதி படி அதனுடைய மதிப்பு கிட்டத்தட்ட 6 முதல் 7 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோன்று அவரின் சொந்த ஊரான மதுரையில் இருவது ஏக்கரில் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 40 கோடி இருக்கும்.

அது மட்டுமில்லாமல் வடிவேலு தன் வீட்டில் ஆடி கார், q7 கார், ஜாகுவார், பி எம் டபிள்யூ என நான்கு சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். வடிவேலு கிட்டத்தட்ட 35 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் இணைந்து நடித்த மாமன்னன் படம் வடிவேலுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Also Read:ஹோட்டல் தொழிலில் லாபம் பார்க்கும் நடிகர் ஜீவா.. தண்ணி கூட ஃபிரீ இல்லையாம்!

Trending News