வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Sirakadikkum Asai: அண்ணாமலைக்கு பாட்டி கொடுத்த ஐடியா.. வைத்தெரிச்சலில் விஜயா, தோற்கப் போகும் மருமகள்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தம்பி சத்தியா முத்து வீட்டுக்கு போனா ஏதாவது பிரச்சினையாகும் என்ற நினைப்பில் லோக்கல் ரவுடி சிட்டி அனுப்பி வைத்தார். அதன் படி முத்து மற்றும் மீனா திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது சத்யா வீட்டுக்குள் நுழைந்தார். உடனே முத்து ஏதாவது பிரச்சினை பண்ணுவார் என்று சத்தியா நினைத்தார்.

அதன் மூலம் அவருக்கு கெட்ட பேரு வர வாய்ப்பு இருக்கிறது என்று சிட்டியும் ஆசைப்பட்டார். ஆனால் முத்து எந்தவித பிரச்சினை பண்ணாமல் சத்யா வாங்கிட்டு வந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு சத்யாவை அசிங்கப்படுத்தி விட்டார். பிறகு பாட்டி அனைவருக்கும் திருஷ்டி சுத்தி போட்டு முத்து மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முத்து மீனாவிற்கு சப்போர்ட்டாக பேசும் பாட்டி

இதனை தொடர்ந்து முத்துவும் மீனாவும் மாடியில் தூங்குவதற்கு போகிறார்கள். அப்பொழுது பாட்டி நீ மட்டும் ஏன் தினமும் அப்படிப் போய் தூங்க வேண்டும். இருக்கிற இரண்டு ரூம்ல 3 பேரும் மாத்தி மாத்தி எடுத்து தூங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதற்கு விஜயா, ரோகினி மற்றும் சுருதி ஏசி, பெட்டு இல்லாமல் தூங்க மாட்டார்கள் என்று சொல்கிறார்.

உடனே முத்து அப்படின்னா அவங்க அங்கே தூங்கட்டும். எனக்கு எங்க படுத்தாலும் தூக்கம் வந்துவிடும். அதனால் நாங்கள் மொட்டை மாடியில் போய் தூங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்கள். பிறகு சுருதி வாங்கி வைத்திருந்த டெண்டை கொடுத்து இதில் நீங்கள் தூங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதன்படி முத்துவும் மீனாவும் காதல் மற்றும் ரொமாண்டிக்காக பேசிக்கொண்டு அங்கே தூங்கக் கொள்கிறார்கள்.

இதற்கு இடையில் பாட்டி அண்ணாமலை இடம் முத்துக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு ஓரவஞ்சனை காட்டுகிறார் உன் பொண்டாட்டி என்று கேட்கிறார். வீட்டுக்குள் ரூம் இல்லை என்றால் மாடியில் ஒரு ரூம் கட்டி அவர்களுக்கு கொடு என்று பாட்டி அண்ணாமலைக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். இதை கேட்டதும் விஜயா வைத்தெரிச்சலில் பொங்குகிறார்.

ஏனென்றால் எப்படியாவது முத்து மீனாவை வெளியே அனுப்பி விட வேண்டும் என்று நினைக்கும் விஜயாவிற்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை மொட்டை மாடியில் ரூம் கட்டிக் கொடுக்கும் வரை இருக்க ரூமில் முதல் வாரத்துக்கு முத்து மீனா தூங்கட்டும். அப்படியே அடுத்தடுத்த ஒவ்வொரு வாரமும் மாற்றிக் கொண்டு எல்லாரும் தூங்குங்க என்று பாட்டி சொல்லி விடுகிறார்.

இதனால் சுருதி ஏதாவது பிரச்சனை பண்ணுவார். அதன் மூலம் நாம் குளிர் காயலாம் என்று ரோகினி நினைக்கிறார். ஆனால் ஸ்ருதி அந்த மாதிரி எதுவும் செய்யாமல் ஈசியாக இந்த விஷயத்தை டீல் பண்ணி விடுவார். கடைசியில் ரோகினி போட்ட பிளான் படி தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.

Trending News