வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அடடா இந்த சாக்லேட் தம்பி இவ்வளவு படம் நடித்து முடித்து விட்டாரா.. தோனி கூட இருந்தாலே சக்சஸ் தான் போல

Cricket Captain Dhoni: என்னதான் முட்டி மோதினாலும் ஒட்டின மண்ணுதான் ஒட்டும் என்று சொல்வார்கள். அது போல தான் இந்த ஹீரோவும் நிறைய படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெருசாக எட்டாத ஒரு ஹீரோவாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரிடம் தற்போது ஏழு எட்டு படங்கள் கைவசம் இருக்கிறது.

இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்கள் கொஞ்சம் வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து இவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில் தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார்.

Also read: புளியங்கொம்புல இருந்து முருங்க கொம்புக்கு வந்த தோனி.. விஜய்யை நம்பி மொக்கை வாங்கிய தல

கடைசியாக இவர் நடித்த படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கை கொடுக்க விட்டாலும் இவரிடம் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அதை முழு முயற்சியாக நடித்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த படங்களில் மூலம் எப்படியாவது மக்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் இப்பொழுது இவர் சேர்ந்திருக்கும் நபர் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். இதில் முதல் படமாக இவர் தான் நடித்து முடித்து இருக்கிறார். அத்துடன் மக்கள் மத்தியில் சாக்லேட் பாய் என்ற ஒரு பெயருடன் உலா வருகிறார். அவர் வேறு யாருமில்லை ஹரிஷ் கல்யாண்.

Also read: தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதானா?.. சுரேஷ் ரெய்னாவிடம் ‘தல’ சொன்ன ரகசியம்

இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படமான “எல்ஜிஎம்” இப்படம் தோனி தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், இவானா மற்றும் நதியா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அடுத்ததாக “டீசல்” படத்தில் அதுல்யா ரவி, ஹரிஷ் கல்யாண், நடிப்பில் சண்முக முத்துசாமி இயக்கி இருக்கிறார்.

இதனை அடுத்து “100 கோடி வானவில்” என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். இப்படம் இன்றைய தலைமுறையில் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பெருசாக சொல்லும்படியான வரவேற்பு இல்லாவிட்டாலும் தொடர்ந்து வாய்ப்புகள் மட்டும் குறையாமல் இவரை தேடிக் கொண்டு வருகிறது.

Also read: தூங்கு மூஞ்சி அஸ்வினை மிஞ்சும் ஹரிஷ் கல்யாண்.. சிரிப்பாய் சிரிக்கும் கோடம்பாக்கம்

Trending News