வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எனக்கு ஆபத்துன்னா தளபதியாய் வந்து நிற்பார்.. கமலஹாசனை தோளோடு தோளாய் காக்கும் நடிகர்

60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்த உலகநாயகன் கமலஹாசன், எப்போதுமே வித்தியாசமான கோலத்தில் படத்தை எடுத்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். அதேசமயம் இவருடைய படங்களுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி பிரச்சனையையும் செய்வார்.

ஏனென்றால் இவருடைய ஒவ்வொரு படங்களும் அவ்வளவு சர்ச்சைகளை சந்தித்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டு இவர் நடித்து தயாரித்த விஸ்வரூபம், அதற்கு முன்பு ஆளவந்தான், விருமாண்டி போன்ற படங்களும் ஏகப்பட்ட பிரச்சனையை சந்தித்து தான் ரிலீஸ் ஆனது.

Also Read : உலகநாயகன்னு சும்மா ஒன்னும் கூப்பிடல.. யாருமே அறியாத கமலின் 6 சாதனைகள்

ஒருமுறை இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறேன் என்றும் கமலஹாசன் கூறிவிட்டார். அந்த அளவிற்கு இவருடைய படங்களுக்கு ஆளுங்கட்சி நிறைய அழுத்தங்களை கொடுத்தது. ஆனால் இன்றும் இவர் மலை போல் ஒரு நடிகரை நம்பியிருக்கிறார்.

அந்த மனிதர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். உலக நாயகனுக்கு நெருங்கிய நண்பராக திரைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இருக்கும் ரஜினி, ஒரு முறை சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கும் போது கமல்தான் அவருக்கு தோளோடு தோளாக நின்றார்.

Also Read : இதுவரை ரஜினி பணியாற்றாத ஒரு லெஜன்ட்.. கமலுக்கு முன்பே காமெடியில் கலக்கிய ஜாம்பவான்

இப்போது கமலுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் குரல் ரஜினியிடம் தான் வரும். அவருக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் தளபதியாய் எப்போதும் ரஜினி இருப்பார் என்ற நம்பிக்கை உலக நாயகனுக்கு இருக்கிறது. முதலில் அரசியலை துவங்க நினைத்த ரஜினி, அதன்பிறகு அவருடைய உடல் நலக்குறைவு காரணமாக கமல் அரசியலில் குதித்ததால் அவருக்குத் துணையாக நிற்கும் முடிவிலும் இருக்கிறார்.

இப்படி சினிமாவை ஜாம்பவான்களாக இருக்கும் கமல், ரஜினி இருவரும் ஒருவர் மற்றவரின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பும் நம்பிக்கையும் கோலிவுட்டில் பலமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் சினிமாவிலும் அரசியலிலும் இணைந்து செயல்படுவதைதான் அவர்களுடைய ரசிகர்களும் விரும்புகின்றனர்.

Also Read : டைமிங் காமெடியில் கமலுக்கே டஃப் கொடுத்த ஒரே இயக்குனர்.. சாதித்து காட்டிய மௌலியின் 5 படங்கள்

Trending News