செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வேட்டைனு வந்துட்டா மிருகங்கள் இல்லைன்னா எப்படி.. ஆட்டத்தை தொடங்கி வைத்த ஆண்டவர்

விஜய் டிவியில் ரசிகர்களின் பேர் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இப்போது ஆறாவது சீசன் தொடங்கி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்று ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜி பி முத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இந்த சூழலில் இன்று எவிக்ஷன் நடைபெற உள்ளது. இதில் இறுதியாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார். இந்த சூழலில் சுமுகமாக போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸில் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் கொடுத்து சண்டையை கொளுத்தி போட்டு உள்ளார் ஆண்டவர்.

Also Read :விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்காத டிடி

அதாவது ஒரு கார்டில் சில விலங்குகளின் பெயர் இருக்கும். அந்த விலங்கின் குணாதிசயம் உடைய சிலர் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கலாம். அவ்வாறு அந்த விலங்குடன் ஒப்பிடும் அளவுக்கு உங்களுக்கு யார் தோன்றுகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும்.

இதில் பாம்பைப் போல் விஷம் உடையவர் யார் என்பதற்கு மைனா நந்தினி தனலட்சுமியை தேர்ந்தெடுத்தார். மேலும் தனலக்ஷ்மி அசீம் விஷத்தை கக்குன மாதிரி இருந்துச்சு என அவரை தேர்ந்தெடுத்தார். நரி போல் குறுக்கு புத்தி உடையவர் யார் என்பதற்கு நந்தினி உடனே மகேஸ்வரியை தேர்ந்தெடுத்தார்.

Also Read :ஜிபி முத்துக்கு பிடித்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.. இவர பிடிக்காத ஆளே இல்ல

அதேபோல் மகேஷ்வரி அசீமை தந்திரமாக வேலை செய்கிறார் என்று கூறினார். சிங்கம் போல் வீட்டை கட்டுப்படுத்துபவர் என்று சொன்னவுடன் மைனா முத்து அண்ணன் என்று கூறுகிறார். ஹவுஸ் மேட்ஸ் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்குமே ஜிபி முத்து தான் சிங்கம் என்று கூறுவார்கள்.

அந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டையே தனக்குள் அடக்கி வைத்திருந்தார் ஜிபி முத்து. சிங்கமாக பிக் பாஸ் வீட்டில் கர்ஜித்து வந்த ஜி பி முத்து பாதியிலேயே சென்றது விஜய் டிவியின் டிஆர்பி பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் வையல்காடு என்ட்ரியாக தரமான ஆளை போட வாய்ப்புள்ளது.

Also Read :ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

Trending News