வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

TVK-வில் இந்தப் பதவி கொடுத்தா இணைய ரெடி.. ஓபன்-ஆக போட்டு உடைத்த ‘அண்ணா’ சத்யராஜ்

சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர்கள் அரசியலில் களமிறங்கக் காரணமே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், ரசிகர்களின் ஆதரவும்தான். அப்படியிருக்கும்போது சினிமாவை விட்டு அரசியலில் குதிக்கக் காரணம் என்றால் மக்களுக்காக நல்லது செய்வது என்பதுதான் அவர்களின் குறிக்கோளாக உள்ளது.

அப்படி சினிமாவில் இருந்து பலபேர் வந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக அரசியலுக்கு வந்திருப்பவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். சினிமாவில் உச்ச நடிகராக தென்னிந்தியாவில் மாஸ் காட்டியிருந்தாலும், அரசியலில் அவர் ஆரம்பத்தில் இருந்துதான் வந்தாக வேண்டும் என்பதால் திராவிட கட்சிகள் அவரது அரசியல் வருகையையும், சமீபத்தில் நடத்திக் காட்டிய தவெகவின் முதல் மாநாட்டையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இருப்பினும் தங்களுக்குப் போட்டியாக அவர் வந்துவிடக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையால் சமீபத்தில் தவெக மாநாட்டுக்கு கூட்டம் அழைத்து வந்தவர்களைப் பற்றி ஆளுங்கட்சி விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.

அதேசமயம், விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்பதால் சினிமாத்துறையினரும் கூட அவரது கட்சியின் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, தாடி பாலாஜி உள்ளிட்டோர் அக்கட்சியில் சேர்ந்ததாக தகவல் வெளியானது. சூர்யா, ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் வெளிப்படையாகவே விஜய்யை பாராட்டியிருந்தனர்.

விஜய்யின் நோக்கம் வரும் 2026 தேர்தலுக்குள் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து, தவெகவை வலுவான கட்சியாக மாற்றி திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான. இதற்காக தொடர்ந்து ஆலோசனைகளை திட்டங்களையும் வகுத்து வருகிறார்.

தவெகவில் அந்தப் பதவி தான் வேண்டும் – சத்யராஜ்

இந்த நிலையில் திராவிட கட்சிகளுக்கும், திராவிட இயக்கங்களுக்கும் ஆதரவாக பேசி வரும் பெரியார் ஆதரவாளரான சத்யராஜ், விஜய் கட்சியில் அந்தப் பதவி கொடுத்தால் சேருவதாக ஓபனாகப் பேசியுள்ளார்.

சினிமாவில் நக்கல் நையாண்டி என கலந்துகட்டி நடித்தவர் சத்யராஜ், இப்போது துணைக்கேரக்டர்களில் நடித்து வந்தாலும் மேடையில் தனக்கு பிடித்ததை பேசக்கூடியவர். ஒரு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அழைப்பு வந்தால் செல்வீர்களா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு அவர் கூறியதாவது.

“விஜய்யை சிறுவயதில் இருந்து பார்க்கிறேன். அவர் மேடையில் பேசியதே மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் என்று கூறியதில் இருந்து எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. தவெகவில் இருந்து அழைத்தால் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்பேன். நம்ம விஜய் அதெல்லாம் கேட்டால் கொடுப்பர். பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப அந்தப் பதவி கொடுங்கள் என்று கேட்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

முதலில் விஜய்க்கு ஆதரவு இப்போது பதவி?

ஏற்கனவே விஜயின் மேடைப் பேச்சிற்கு சீமான் விமர்சனம் கூறியபோது, தமிழ்த் தேசியமும் திராவிடமும் ஒன்றுதான் என்று கூறி நாம் தமிழர் கட்சியினருக்கும் சீமானுக்கும் பதிலடி கொடுத்து, விஜய்க்கு ஆதரவளித்த நிலையில், விஜய் சேருவதாக ஓபனாக சத்யராஜ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News