ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

அட்வகேட்னா நிறைய பொய் சொல்லனுமே.. ஜூலியை சீரியலில் பொறுக்கி போட்ட விஜய் டிவி

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பாப்புலரான ஜூலி, அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவோடு ஏற்பட்ட சண்டை சச்சரவுக்கு பிறகு அவருக்கு அதிகமாக நெகட்டிவ் உருவாகிவிட்டது. ஏனென்றால் பிக் பாஸில் ஜூலி செய்த பொய் பித்தலாட்டத்தை கமல் குறும்படம் காட்டி உண்மையை வெளிப்படுத்தினார்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகும் ஜூலியை ரசிகர்கள் திட்டிக் கொண்டே இருந்தனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றே ஜூலி அடுத்ததாக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு தனக்கிருந்த நெகட்டிவிட்டியை ஓரளவு குறைத்தார். இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலின் 2ம் பாகத்தில் அட்வகேட் ஆக ஜூலி என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Also Read: கடங்காரனாக மாறிய புஷ்பா புருஷன்.. பாக்யாவை பகைத்ததால் பல பேர் ஹாஸ்பிடலில் அட்மிட்

அட்வகேட் என்றால் நிறைய பொய் சொல்ல வேண்டும். அது ஜூலிக்கு இயற்கையாகவே கைவந்த கலை. ஆகையால் இந்த கேரக்டரில் ஜூலி பக்காவாக செட்டாகுவார் என்று விஜய் டிவி தேடி பொறுக்கி போட்டு இருக்கிறது. அதாவது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் 2ம் பாகம் துவங்கியுள்ளது.

இதில் கதாநாயகன் வெற்றி முரட்டு வில்லனாகவும், அபி கலெக்டர் ஆகவும் மாறி உள்ளனர். கணவர் என்று கூட பார்க்காமல் வெற்றியை சிறையில் அடைக்க வேண்டும் என அபி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் ஆதாரத்துடன் வெற்றியின் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்.

Also Read: கொஞ்ச, நெஞ்ச பேச்சாடா பேசுன.. டைட்டில் வின்னராக இருந்தும் வாய்ப்புக்காக அலையும் பிக்பாஸ் பிரபலம்

ஆனால் ஆள் மாறாட்டம் செய்து அவர் எப்படியோ தப்பித்து விடுகிறார். இதன்பிறகு மற்றொரு ஆதாரத்தை அபி தயார் செய்து கொண்டிருக்கும் போது, ஜூலி வக்கீலாக என்ட்ரி கொடுத்து வெற்றியை ஜாமினில் அழைத்து செல்கிறார். அப்போது ஜூலி அபியிடம், ‘மாவட்ட கலெக்டராக வேலை செய்வதற்கு எக்கச்சக்கமான வேலைகள் உள்ளது. அந்த வேலையும் பார்த்துக் கொண்டு வெற்றியையும் சேர்த்து பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களே! இதெல்லாம் ரொம்ப தப்புங்க மேடம்’ என்று திமிரு காட்டுகிறார்.

மேலும் ஜூலி வக்கீலாக மாறுவதற்கு வெற்றி தான் முழு காரணம். ஆகையால் அவர் செய்யும் ரவுடித்தனத்தினால், அவ்வப்போது போலீசில் மாட்டும்போது ஜூலி தான் அட்வகேட் ஆக வந்து அவரை ஜாமினில் எடுத்து, வெளியே கொண்டு வருகிறார்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Trending News