ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நீங்க தியேட்டர்ல தேரை இழுத்து வந்தா, நாங்க புலியை இழுத்து வருவோம்.. ஆவேசத்தில் எம்.ஜி.ஆரின் பக்தர்கள்..!

Sivaji and MGR films released same day issue: நிழல் நிஜம் இரண்டும் ஒன்று என்று எண்ணும் அளவுக்கு ரசிகர்கள் நடிகர்களை தன் உயிரோடு பிணைத்துக் கொண்டிருந்தனர். தலைவர்களின் இயல்பான நடிப்பை மட்டும் கொண்டாடாமல் நடிகர்களையே கொண்டாடிய காலம் அது.

இப்போது எப்படி தல, தளபதி திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே போட்டியை ஏற்படுத்துகிறதோ அதே போல் 70களில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் படங்கள் ஒரே நாளில் களமிறங்கி ரசிகர்களிடையே போட்டா போட்டி போட்டது.

சிவாஜியின் கர்ணன் மற்றும் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் இரண்டும்1964 இல் ஜனவரி பொங்கலன்று ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருந்தது. இச்சம்பவம் கர்ணன் படத்தை தயாரித்த பி.ஆர். பந்தலுக்கு பயத்தை ஊட்ட வேட்டைக்காரன் படத்தை தயாரித்த சின்னப்ப தேவரிடம் விஷயத்தை சொன்னார். வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டிக்கொண்டார்.

Also read: சிங்க பெண்ணை கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்ட ரசிகர்.. நேரம் பார்த்து மூக்கை உடைத்த ஜெயலலிதா

சின்னப்ப தேவரோ எம்.ஜி.ஆருக்கு கர்ணன் படத்தின் ஒரு ஷோ போட்டு காமியுங்கள் முடிவை அவர் சொல்லுவார் என்று யோசனை கூறினார். அதன்படி எம்.ஜி.ஆர் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு  சிவாஜியின் நடிப்பையும் மற்ற நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார். இறுதியாக ரசிகர்களை ஏமாற்ற கூடாது இரண்டு படமும் ஒன்றாக வெளி வந்தாலும் கர்ணன் நல்லபடியாக ஓடும் என்று சொல்லிவிட்டு போனார்.

அதன்படி இரு படங்களும் ஒன்றாக திரைக்கு வந்தன. சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரில் ரசிகர்கள் கர்ணன் படத்திற்காக ஏழு குதிரைகள் கொண்ட பிரம்மாண்டமான தேரை செட் போட்டு வைத்திருந்தனர். இதனை ஈடு செய்யும் விதமாக எம்.ஜி.ஆரின் ரசிகர்களோ சென்னை சித்ரா தியேட்டர் வாசலில் காடு போன்ற ஒரு செட் அமைத்து  நிஜமாகவே புலியை கொண்டு வந்து கூண்டில் அடைத்தனர்.

மக்கள் ஆர்வத்துடன் வேட்டைக்காரன் படத்தையும் பார்த்து புலியையும் பார்த்து சென்றனர். மிகப்பிரம்மாண்ட செலவில் கலரில் எடுக்கப்பட்ட கர்ணன் பட வெற்றியை விட குறைந்த செலவில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் வசூலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனால் வருத்தப்பட்ட பி.ஆர். பந்தலுவை எம்.ஜி.ஆர் நேரில் அழைத்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கான கால் சீட்டை கொடுத்து வேட்டைக்காரன் ஆன எம்.ஜி.ஆர் அவர்கள் கர்ணனாக உயர்ந்தார்.

Also read: எம் ஜி ஆர்ரையே உரசிப் பார்த்த ரசிகர்கள்.. பண்ணை வீட்டில் திருடர்களை துவம்சம் செய்த வாத்தியார்

Trending News