திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தொடர்ந்து அந்த கெட்ட பழக்கம் இருந்தால் நான் சொல்றதை கேளுங்க.. வெற்றிமாறன் கூறும் சீக்ரெட்

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பிறகு அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் தேசிய விருதுகளை தட்டி தூக்கி கொண்டு இருக்கிறது. இவர் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் வெற்றிமாறன் 13 வயதிலிருந்து 33 வயது வரை செயின் ஸ்மோக்கர் ஆக இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கான வழிகளையும் சொல்லி இருக்கிறார்.

Also Read: விடுதலை பார்ட்-2க்கு பின் மீண்டும் இணையும் வெற்றிமாறன்-சூரி காம்போ.. அதுலயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு

வெற்றிமாறனுக்கு காலையில் சாப்பிடும் பழக்கமே கிடையாது. சிகரெட் அடிப்பாராம். அதன் பிறகு டீ குடித்துவிட்டு மறுபடியும் சிகரெட் அடிப்பாராம். மறுபடியும் டீ குடிப்பாராம் தம்மடிப்பாராம். இது தொடர்ந்து கொண்டே இருக்குமாம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விடுவதற்காக டயட் பின்பற்ற துவங்கினேன்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திய போது சுவிங்கம் தான் பயன்படுத்தினேன். அதுவும் நல்ல பழக்கமல்ல. இருந்தாலும் அந்த சமயத்தில் அதையும் ஒரு வழியாக எடுத்துக் கொண்டேன். ஆனால் அதைவிட எனக்கு சிறந்த தீர்வாக அமைந்தது கோல்டு வாட்டர் தான். பெரிய டம்ளரில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு அதை முழுவதுமாக அருந்திவிட்டு ஒரு பெருமூச்சு விடுவேன்.

Also Read: வாடிவாசலுக்கு தயாராகும் காளைகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடும் சூர்யா

அந்த மூச்சுக்காற்றை காற்றை வெளிவிடும் போது புகைப்பிடிக்க தூண்டும் உணர்வும் தன்னை விட்டு போய்விடும். இது ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. ஆகையால் பல வருடங்களாக புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் இதை ஒருமுறை செய்து பார்க்கலாம்.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று வெற்றிமாறனுக்கு இருந்த ஒரு கெட்ட பழக்கத்தை எப்படி விட்டார் என்பதையும், அதற்கான சீக்ரெட்டையும் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசினார். இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதைப் பார்த்த அவருடைய ரசிகர்களும் சிலர், இதுபோன்று முயற்சிக்க ட்ரை பண்ணுவதாகவும் கருத்து பதிவிடுகின்றனர்.

Also Read: திரையில் காட்டாத 18+ விஷயங்களை ஓடிடியில் பார்க்கலாம்.. வெற்றிமாறனின் அதிரடி முடிவு

Trending News