ACTOR VIJAY CHOOSE ACT LIKE A ACTOR RAMARAJAN: நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ திரைப்படம் 600 கோடி வரை வசூலான நிலையில், இப்படத்தை தொடர்ந்து தளபதி68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்க உள்ளார்.
ஏற்கனவே அதற்கான வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், லியோ படத்தின் வெற்றி விழாவின் போது கப்பு முக்கியம் பிகிலு என கூறி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தளபதி68 படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முழு வீச்சாக அரசியலில் இறங்குவதற்காக இப்போது பல வேலைகளை செய்து வருகிறார். அதிலும் முக்கியமாக தனது அரசியல் வருகை குறித்து விளம்பரம் செய்வதில் நடிகர் விஜய் ஆர்வமாக உள்ளார்.
உதாரணமாக தனது விஜய் ரசிகர் மன்ற இயக்கத்தினரை அழைத்து அவ்வப்போது அரசியல் கலவரம் குறித்து பேசுவது, அவர்களை கட்சி குறித்து வேலை செய்ய சொல்வது என பல வேலைகளை செய்து வருகிறார். தற்போது வரை தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் குறித்து கூட விஜய் பேசாத நிலையில், சில மாவட்டங்களில் வருங்கால முதல்வரே என விஜய்யின் அரசியல் வருகை குறித்த விளம்பர போஸ்டர்களை கண்டும் காணாமல் உள்ளார்.
Also Read: ரஜினி, அஜித்துக்கு கொக்கி போடும் விஜய் தம்பி.. பாட்ஷாவை தூக்கி சாப்பிட தயாராகும் ஸ்கிரிப்ட்
ஆனால் இதுதான் விஜய்யின் கேரியருக்கும், அரசியலுக்கும் முட்டுக்கட்டையாக அமையும் விஷயம் என பலரும் கூறி வருகின்றனர். காரணம் 80களில் நடிகர் ராமராஜன் அடைந்த பேர், புகழை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் கூட அடைந்ததில்லை எனலாம். அந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருந்த இவர், திடீரென அரசியலில் கால்பதித்து அன்றைய பத்திரிக்கைகளில் அதிகம் பேசும் பிரபலமானார்.
42 பக்கம் விளம்பரங்கள்: தன்னை பற்றியும் தன் அரசியல் வருகை குறித்து பேச மட்டுமே கிட்டத்தட்ட ஒரு நாளிதழில் 42 பக்கம் வரை விளம்பரங்களை செய்வாராம். ஆனால் அப்படி அவர் விளம்பரம் செய்தது தான் அவரது சினிமா, அரசியல் வாழ்க்கை வீழ்ந்ததற்கு காரணமாக அமைந்தது. தற்போது நடிகர் ராமராஜன் போலவே நடிகர் விஜய்யும் தன்னை குறித்து அதிகம் விளம்பரம் செய்வது அவருக்கு பின்னடைவு தான் என பலரும் கூறி வருகின்றனர்.
மேலும் அப்போது முதல் இப்போது வரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை குறித்து அதிகம் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்துக் கொள்ளாமல் தான் உள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவர் அரசியல் கட்சி தொடங்கியபோது கூட விளம்பரங்களை அதிகம் விரும்பவில்லை. அதனால் தான் சூப்பர்ஸ்டாராக இன்று வரை மக்கள் மனதில் ரஜினிகாந்த் நிலைத்து நிற்கிறார் என்றும் இந்த விஷயத்தை ரஜினியிடம் இருந்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Also Read: இன்னுமா இந்த லியோவை தூக்கல.? விஜய், அஜித் பேன்ஸ்க்கு தியேட்டர் நச்சுன்னு போட்ட ஆஃபர்